Thursday, February 19, 2015

தங்க கதவின் பூட்டை உடைத்து திருப்பதியில் தரிசனம் செய்தார் ஜனாதிபதி மைத்திரி! (படங்கள், வீடியோ இணைப்பு)

பாஜகா கடவுளை மறுப்பதும் தமிழரை வெறுப்பதும் இந்துக்களை அதுவும் சைவர்களை கோல திட்டமிடுவதும் கோயில் கதவை மைத்திரிக்காட்க  உடைத்தது போலவே!சிங்கள விசுவாசம்!
இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நேற்று அதிகாலை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றபோது கோவலிலுள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல் போனதால் பூட்டை உடைத்து கதவைத் திறந்துள்ளனர்.
இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நேற்று அதிகாலை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றபோது கோவலிலுள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல் போனதால் பூட்டை உடைத்து கதவைத் திறந்துள்ளனர்.


ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டுள்ள நிலையில் தினமும் அதிகாலை கதவு திறக்கப்பட்டு சுப்ரபாத வழிபாடுகள் செய்யப்படும். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோவிலுக்கு சென்றபோது பூட்டை திறக்க முடியாது போனதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் சிறிது நேரம் கழித்து பூட்டு அகற்றப்பட்ட பின்னர் சுப்ரபாத சேவை செய்யப்பட்டது. அதனையடுத்து ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவும் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் மூலவர் அறையின் தங்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டதால் சாமி தரிசன சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

19 Feb 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1424348644&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment