Saturday, February 28, 2015

மஹிந்தவின் தோல்­வி பற்றிய ஒரு சுவாரஸ்ய கட்டுரை….

புலம்பெயர் தமிழர்கள் மீது கடுப்பான நடிகர் சரத் குமார்….

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களே அதிகளவில் தமிழகத்தில் திரையிடப்படும் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்து, அவற்றை இணையத்தின் ஊடாக தரவேற்றம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காக தாம் குரல் கொடுத்து வருவதாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்து சுவீடன் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் தமிழ்த் திரைப்படங்களை தரவேற்றம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் கடமையாற்றக் கூடாது என்ற ஓர் நிலைப்பாடு காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் இலங்கையில் பணியாற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இலங்கைக்கு சென்று திரைப்படங்களை படமாக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் வெளியாகும் தினத்திலேயே டி.வி.டிக்களின் மூலம் திரைப்படங்களை வெளியிடும் இயக்குனர் சேரனின் திட்டத்திற்கு ஆதரளிப்பதாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான ஓர் நிலைமையே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/98997.html

பேஸ்புக் காதலால் மகள் அந்நிய ஆடவனுடன்…… பெற்றோர் நடுவீதியில்…..

பிறகு சில காவி கும்பலால் அந்த பெண்ணை ஹிந்து மதத்திற்கு மாற்றி நெற்றியில் பொட்டு வைத்து தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்க பட்டது. அந்த பெண்ணின் பெற்றோர் கோர்ட் வாசலில் கதறி அழுதது அனைவரின் நெஞ்சங்களையும் துளைத்து விட்டது.
பாலும் பழமும் கொடுத்து பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த் தன் பெண்ணை பொறம்போக்கு பொரிக்கிகள்
நெட் பேக் கூட போட வழி இல்லாத வேலை இல்லா வெட்டி தெரு பொறிக்கி நாய்கள் வெறும் 100 ரூபாய் ஸ்பெசல் ஆபரில் நெட் பேக் போட்டு காதல் என்னும் காம வலையில் பெண்களை வீழ்த்தி விடுகிறார்கள்.

அமானிதமான மகள், சகோதரியை கொண்டுள்ள நம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. பேஸ்புக், வாட்ஸ்அப்களில் எம் மகள், சகோதரிகள் உலா வருகின்றர்களா? ஸ்மார்ட் போன், லேப்டாப்களில் நேரம் செலவழிக்கின்றார்களா எச்சரிக்கையாக இருங்கள். இந்த நிலை எமக்கும் வராமல் தடுக்க, நடுவீதியில் அவமானப்பட்டு நிற்காமல் அவதானமாக எமது அமானிதங்களை loveகாப்போம்.
http://www.jvpnews.com/srilanka/99047.html

வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய பாலியல் வன்புணர்வு வீடியோ:

சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன், இரண்டு பெண்கள் கும்பல் ஒன்றால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ பரவலாக பரவி வந்தது.
மேலும், அந்த வீடியோவில் அந்த செயலில் ஈடுபட்டவர்கள் சிரித்தபடி இருந்தனர்.
இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன் என்பவர், இந்த கும்பலில் உள்ள கொடூரர்களின் முகத்தை வீடியோவில் வட்டமிட்டு எளிதில் அடையாளம் காணும் வகையில் யுடியூப்பில் வெளியிட்டார்.
மேலும், இவர்களை அடையாளம் காட்ட அனைவரும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது.

மேலும், இவ்விடயத்தில் தானாக முன்வந்துள்ள உச்ச நீதிமன்றம், சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/99056.html

மஹிந்தவின் தோல்­வி பற்றிய ஒரு சுவாரஸ்ய கட்டுரை….

பயங்­க­ர­வாதம் இடம்­பெற்று வரும் ஏனைய நாடு­களும் கூட பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு தன்­னி­டமே ஆலோ­சனை பெற வேண்டும் என்ற பாங்கில் தன்னை உல­குக்கு காட்டி வந்­துள்ளார். இதன் கார­ண­மா­கவே யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் கொல்­லப்­பட்ட அப்­பாவி மக்­க­ளது படு­கொ­லைகள் மனித உரிமை மீறல்கள் சம்­பந்­த­மாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை பேர­வையில் தொடர்ச்­சி­யாக எடுத்து வந்த தீர்­மா­னங்­க­ளையும் கூட துச்­ச­மென மதித்து அவற்றை நிரா­க­ரித்து வந்தார்.
இதன்­மூலம் சர்­வ­தேச ஆத­ர­வு­களை இழந்து நின்றார். இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு இந்­தியா வழங்கி வந்த ஆலோ­ச­னை­க­ளையும் கூட மதி­யாமல் இப்­பி­ரச்­சி­னையில் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக பேசி இனப்­பிரச்­சி­னைக்கு தீர்­வினை காண்­பதில் இழுத்­த­டிப்பு செய்து வந்தார்.
இரண்டு முறைதான் ஒருவர் நாட்டில் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடியும் என இலங்கை அர­சியல் யாப்பில் வழி வகுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அத­னையும் மீறி அர­சியல் யாப்­பிற்கு 18ஆவது திருத்­தத்தை கொண்டு வந்­ததன் மூலம் இரண்டு முறைக்கு மேலும் ஒருவர் பத­வி­யி­லி­ருக்­கலாம் என்ற நிலை­மையை உரு­வாக்­கினார். தான் தொடர்ந்தும் பத­வியில் இருக்க வேண்டும் என்ற அபி­லா­ஷையின் கார­ண­மா­கவே இந்த சட்­டத்­தி­ருத்­தத்தை கொண்டு வந்தார் என்­பது வெளிப்­படை.
இத்­தேர்­தலில் நானே போட்­டி­யி­டுவேன் என்றும் அதில் நானே வெற்றி ஈட்­டுவேன் என்றும் பிடி­வா­த­மாக செயற்­பட்ட ராஜபக் ஷவுக்கு தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­வி­யா­னது இந்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் பெரும் அதிர்ச்­சி­யையும் ஆச்­ச­ரி­யத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது.
அவரை தோற்­க­டிக்க வேண்­டு­மென அதற்­காக போராடி வந்­த­வர்­களும் அவர் தோல்­வி­யு­றத்தான் வேண்டும். நாட்டில் மாற்றம் ஒன்று நிச்­ச­ய­மாக தேவை என மிகவும் ஆவ­லோடு எதிர்­பார்த்து வந்த மக்­களும் கூட கடைசி நிமிடம் வரை இது உண்­மை­யி­லேயே சாத்­தி­ய­மா­குமா என சந்­தேகம் கொண்­டி­ருந்­தனர். எந்­நே­ரத்­திலும் எதுவும் நடக்­கலாம் என மக்கள் எதிர்­பார்த்த வண்­ண­மி­ருந்­தனர்.
இவரை எதிர்த்து போட்­டி­யி­டு­வ­தற்கு இவ­ரது கட்­சி­யி­லி­ருந்து பொது செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன முன் வருவார் என்று இவர் சிறிதும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. மிகவும் இர­கசி­ய­மான முறையில் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு இறுதி நேரத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டது மஹிந்த ராஜபக் ஷவுக்கு பேர­திர்ச்­சியை தோற்­று­வித்­தி­ருந்­தது. காரணம் போட்­டி­யி­டு­வ­தற்கு வேறு யார் முன்­வந்­தி­ருந்­தாலும் அவரை மிகவும் இல­கு­வாக வெற்றி பெற்று விடலாம் எனவும் அவ்­வா­றான ஒரு­வ­ரையே எதிர்­பார்த்து காத்­தி­ருந்த இவ­ருக்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட முன் வந்­தது தன்னை நிலை­கு­லைய செய்­தது மட்­டு­மல்ல பெரும் சினம் கொள்­ளவும் செய்­தது.
இவர் எவ்­வ­ள­வுதான் அர­சி­யலில் வெற்றி தோல்­வி­களை பொது­வா­ன­தொன்­றாக எடுத்­துக் கொண்­டி­ருந்­தாலும் அதற்­கெல்லாம் மேலாக இவர் ஜாத­கங்­க­ளிலும் ஜாத­கர்­களின் வாக்­கு­க­ளிலும் அசையா நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். அதற்­கா­கவே தனக்­காக நிரந்­த­ர­மான ஜாதகர் ஒரு­வரை வைத்­துக்­கொண்டு தான் ஆரம்­பிக்கும் எல்லா வேலை­க­ளை­யுமே சுப நேரங்­களில் தீர்­மா­னித்து தனது வெற்­றியின் இலக்கை நோக்கி செயற்­பட்டு வந்தார்.
இம்­மு­றையும் நீங்­களே வெற்றி ஈட்­டு­வீர்கள் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்த ஜாத­கரின் வாக்­கு­று­தியில் முழு நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். என­வேதான் சென்ற இடங்­க­ளி­லெல்லாம் திரட்­டப்­பட்­டி­ருந்த மக்கள் கூட்­டத்தில் பேசும் போது தான் எதனை சொன்­னாலும் மக்கள் அதனை நம்­பு­வார்கள் என்ற ரீதியில் தனக்கே உரித்­தான இறு­மாப்­போடு பேசி வந்தார்.
இவர் சென்ற இட­ங்­க­ளி­லெல்லாம் சமுக­ம­ளித்­தி­ருந்த கூட்­டங்கள் எவ்­வாறு கூட்­டப்­பட்­டது என்­பது பொது­வா­கவே மக்கள் மத்­தியில் விவா­திக்­கப்­பட்ட ஒரு விட­ய­மா­க­வி­ருந்­தது. ஓரி­டத்தில் கூட்டம் என்றால் வெவ்­வேறு இடங்­க­ளி­லி­ருந்து மக்கள் அழைத்து வரப்­பட்டு பெரும் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே கூட்டம் முடியும் வரை அவர்­கள் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தனர் என்று சொல்­லப்­பட்­டது. தேர்­தலில் ராஜபக் ஷ தோல்­வி­யு­றுவார் என­ அவர் எதிர்­பார்க்­க­வில்லை. தனக்கு இன்னும் நல்ல காலம் தொடர்­கின்­றது என்றும் இத்­தேர்­தலில் நான் என்ன வழி­யி­லா­வது வெற்றி பெறுவேன் எனவும் ராஜபக் ஷ திட­மான நம்­பிக்கை கொண்­டி­ருந்தார்.
ஆனால், இவ­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்த சிங்­கள, தமிழ், முஸ்லிம் என்ற அனைத்து மக்­களும் மிகவும் அமை­தி­யா­கவும் பொறு­மை­யா­கவும் பக்­கு­வ­மா­கவும் நடந்து கொண்டு ராஜபக்ஷ மீது தாங்கள் கொண்­டி­ருந்த அதி­ருப்­தியை தமது வாக்கு பலத்தின் மூலம் எடுத்­துக்­காட்­டி­யுள்­ளனர்.
இது குறித்து தேர்­த­லுக்கு பின் கருத்து வெளி­யிட்ட ராஜபக் ஷ தன்னை தோல்­வி­யுற செய்­தது தமிழ், முஸ்லிம் மற்றும் தோட்டவாழ் தமிழ் மக்­கள்தான் என கூறி­யுள்­ள­தாக இந்­தி­யாவின் ஓய்­வு­பெற்ற இரா­ணுவ ஜெனரல் அசோக் கே.மேத்தா தனது பத்­தி­ரிகை அறிக்­கை­யொன்றில் கூறி­யுள்ளார். (தகவல் லங்கா தீப)
வட பகுதி தமிழ் பேசும் மக்கள் இவ­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­தற்கு காரணம் அங்கு யுத்தம் முடி­வுற்­றி­ருந்­தாலும் யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்த மக்கள் தமது சொந்த இடங்­களில் மீள் குடி­யேற்­றப்­ப­டாமை தமக்கு சொந்­த­மான இடங்­களை இரா­ணு­வத்­தினர் அப­க­ரித்­துக்­கொண்­டுள்­ளமை, இரா­ணுவ அதி­கா­ரியை கவர்­ன­ராக வைத்­துக்­கொண்டு சிவில் நடை­மு­றை­களை ஒடுக்­கப்­பட்டு வந்­துள்­ளமை, மாகாண சபை அதி­கா­ரங்­களில் வீண் தலை­யீ­டுகள் போன்ற பல்­வேறு அவ­லங்­க­ளுக்கு முகம் கொடுத்து வந்­தி­ருந்­தாலும் அவை எத­னையும் ராஜபக்ஷ தனது காதுகளில் போட்­டுக்­கொள்­ள­வில்லை.
மேலும் முஸ்லிம் மக்கள் மீது தொடுக்­கப்­பட்டு வந்­துள்ள இன­வாத தாக்­குதல் சம்­ப­வங்கள் திட்­ட­மி­டப்­பட்ட முறையில் பள்­ளி­வா­சல்கள் இந்து, கிறிஸ்­தவ, வணக்­கஸ்­த­லங்கள் தாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் அனைத்தும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவ மக்கள் ராஜபக் ஷ மீது வெறுப்பு கொள்ளும் நிலையைத் தோற்­று­வித்­தி­ருந்­தன.
தோட்ட தொழி­லா­ளர்­க­ளது காணி வீடில்­லாத பிரச்­சினை மற்றும் ஏற்­க­னவே தோட்­டங்­களில் வங்­கிகள் மூலம் கடன்­களை பெற்று குடி­யி­ருப்­புக்­களை அமைத்து கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு வீட்டு உரிமை பத்­திரம் வழங்­கப்­ப­டாமை தொடர்ச்­சி­யாக தொழி­லாளர் ஏமாற்­றப்­பட்டு வந்­துள்­ளமை போன்ற விட­யங்கள் தோட்டத் தொழி­லா­ளர்கள்
ராஜபக் ஷ மீது வெறுப்­ப­டைய செய்யும் நிலையை தோற்­று­வித்­தி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே வீதி­களில் இறங்கி கோஷங்­களை எழுப்பி போராடி வந்த மலை­யக மக்கள் தங்­க­ளுக்கு தேவை­யான நாட்டின் புதிய தலைவன் ஒரு­வரைத் தேர்ந்­தெ­டுப்­பதில் முனைப்­பாக செயற்­பட்­டனர்.
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் தனியார் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வந்த கூட்டு ஒப்­பந்த முறை­யி­லான சம்­ப­ளத்தை கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க
ராஜபக்ஷ அரசு மறுத்து வந்­துள்­ளது. இந்த விட­யத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் அரசு நேர­டி­யா­கவே தொழி­லாளர் விரோத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வந்­துள்­ளது என தொழிற்­சங்­கங்கள் குற்றம் சாட்டி வந்­தன. அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான தோட்­டங்­களில் தொழி­லா­ளர்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வந்­துள்­ளனர்.
தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி போன்­றவை உரிய வங்­கி­களில் வைப்­பி­லி­டப்­ப­டா­மலும் நீண்ட காலம் சேவை­யாற்றி ஓய்­வு­பெற்ற தொழி­லா­ளர்­க­ளது சேவைக்­காலப் பணம் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டாமல் கோடிக்­க­ணக்­கான ரூபா மோசடி செய்­யப்­பட்­டது.
அரச தோட்­டங்­களில் களவு, ஊழல், வீண்­வி­ரயம் போன்­றவை தாரா­ள­மாக இடம்­பெற்று வந்­துள்­ளன.
இதனால் தொழி­லா­ளர்கள் அனு­ப­வித்து வந்த கஷ்ட நஷ்­டங்கள் தொடர்­பாக தொழிற்­சங்­கங்­களால் தொடர்ச்­சி­யாக விடுக்­கப்­பட்டு வந்­துள்ள புகார்கள் எத­னையும் ராஜபக் ஷ கடு­க­ள­வேனும் தனது காது­களில் போட்­டுக்­கொள்­ள­வில்லை.
ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் வீண் விர­ய­மாக்­கப்­பட்ட கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறு பகு­தி­யை­யேனும் இந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்தால் அது அவர்­க­ளுக்கு பெரும் விமோ­ச­ன­மா­கி­யி­ருக்­கு­மல்­லவா!
மேலும் இந்­நாட்டின் பெரும் தொழிற்­சங்க சம்­மே­ள­னங்­களின் மூலம் தேசிய தொழி­லாளர் ஆலோ­சனை சபையில் முன்­வைக்­கப்­பட்டு நீண்ட கால­மாக விவா­திக்­கப்­பட்டு சட்­ட­மாக்­கப்­ப­ட­வி­ருந்த தொழி­லாளர் சாச­னத்தை சட்­ட­மாக்­கு­வதில் மஹிந்­தவின் அரசு பின் வாங்­கி­யமை, தோட்ட தொழி­லா­ளர்­களின் கொடுப்­ப­ன­வு­களை வழங்­கு­வதில் அசி­ரத்தை மேற்­கொண்­டமை, மஹிந்த ராஜபக் ஷ தொழிற்­சங்க சம்­மே­ளன தலை­வர்­களை சந்­தித்து இவற்­றிற்­கான இறுதி தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிப்பு செய்து வந்­தமை போன்ற கார­ணங்கள் தொழிற்­சங்க தலை­வர்கள் இவர் மீது வெறுப்­புக்­கொள்ள செய்­தது.
இதன் கார­ண­மா­கவே மஹிந்த ராஜபக் ஷவோடு ஆரம்ப காலம் தொட்டு ஒன்­றாக செயற்­பட்டு வந்த தொழிற்­சங்க தலை­வர்கள் கூட விரக்தி நிலைக்கு தள்­ளப்­பட்டு அவர்­களும் அவ­ருக்கு எதி­ராக செயற்­பட்­டதில் வியப்­பொன்­று­மில்லை.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2016ஆம் ஆண்டு வரை பதவி யிலி­ருப்­ப­தற்கு அர­சியல் யாப்பில் இட­மி­ருந்­தது. இருப்­பினும் 2015லேயே தேர்­தலை நடத்­தினால் தனக்கு வெற்­றிக்­கிட்டும் என்ற நப்­பா­சையில் தேர்­தலை நடத்த முன்­வந்தார். இந்த முடி­வுக்கு தனது கட்­சி­யி­லி­ருந்த ஒரு பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்து எதிர்ப்­புக்கள் தோன்­றின. இப்­போது தேர்­தலை நடத்த வேண்டாம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்து விட்டு பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரங்­களை வழங்கி அதனூடாக அடுத்த தேர்தலை சந்திக்கலாம் என்று அவர்கள் கூறிய ஆலோசனைகள் எதனையும் மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக்கொள்ளவில்லை.
காரணம் இத்தேர்தலில் தான் வெற்றி ஈட்டுவேன் என்ற அசையா நம்பிக்கையிலிருந்ததேயாகும்.
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் இவர் எந்த ஒரு கரிசனையும் மேற்கொள்ளவில்லை. வெற்றிகொள்வதற்கு முன்பு தான் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வினை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதிகளை அளித்து வந்த அவர் யுத்தத்தில் வெற்றிக்கொண்ட பின்பு அவ்வாறான ஒரு பிரச்சினை இருப்பதாக கூட இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
யுத்தம் முடிந்த கையோடு யுத்த வெற்றியினை மாத்திரம் கருவாக வைத்து கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பிரபல்யப்படுத்தி அவர்களின் முழு ஆதரவுடனேயே தனது அரசியலைத் தொடர முற்பட்டார். இன ரீதியிலான அரசியலை நடத்தி வந்த ராஜபக் ஷவுக்கு எதிராக சிறுபான்மை இன மக்கள் மாத்திரமல்லாமல் இந்நாட்டில் கல்விமான்கள் புத்திஜீவிகள் என்று பலரது எதிர்ப்புக்களையும் அவர் இத்தேர்தலில் சந்திக்க நேரிட்டது.
http://www.jvpnews.com/srilanka/99065.html

No comments:

Post a Comment