Tuesday, February 3, 2015

மீண்டும் சர்சையை கிளப்பியுள்ள அமெரிக்க பொலிசார்: துப்பாக்கியை எடுத்து குறிவைத்தார்கள் !


பனிக்கட்டியை எறிந்து சண்டையிட்ட இளையவர்கள் மீது கைத்துப்பாக்கியால் குறிவைத்தபடி வந்து சோதனை செய்யும் அமெரிக்கப் பொலிஸ் அதிகாரியொருவருடைய காணொளி தற்போது இணையங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் அமெரிக்கப் பொலிஸார், அந்நாட்டு பொதுமக்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து வரும் நிலையில், சிறு சண்டை ஒன்றுக்காக இளைஞர்களை நோக்கி துப்பாக்கியால் குறி வைத்தமை பாரிய அதிருப்தியை பொதுமக்களிடையே தோற்றுவித்திருக்கின்றது.
அந்தக் காணொளியில், இரண்டு இள வயது ஆண்கள் முழங்காலிட்டபடி தமது கைகளை உயர்த்தி உட்கார்ந்திருக்கும் போது, கைத்துப்பாக்கியால் குறிவைத்தபடி, கூச்சலிட்டவாறு நியூ ரொசல்லே பொலிஸ் அதிகாரி ஒருவர் அங்கு வந்து அவர்களைச் சோதனையிடுகின்றார். இந்தக்காட்சியை பெண்ணொருவர் தனது தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார். அவர், இச்சம்பவம் பற்றி விபரிக்கையில், ‘இரண்டு இளைஞர்கள் பனிக்கட்டியை வீசி சண்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பொலிஸ் அதிகாரி அவர்களை நோக்கி துப்பாக்கியால் குறிவைத்தபடி வந்தார்’ என்றார்.
நியூயோர்க் – நியூ ரொசல்லே பொலிஸ் திணைக்களம் இச்சம்பவம் பற்றி கருத்துக்கூற மறுத்துவிட்டது. கடந்த புதன்கிழமை நியூயோர்க் நகரத்தில் பாரிய பனிப்பொழிவு இடம்பெற்ற போதே இச்சம்வமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment