Thursday, February 26, 2015

கூலாக நிர்வாணமாய் உலாவிய பெண்: கூச்சமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியின் அருங்காட்சியம் ஒன்றில் நிர்வாண கோலத்தில் சுவிஸ் பெண் ஒருவர் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு ஜேர்மனியில் உள்ள முன்ஸ்டர்(Munster) நகரில் கலை மற்றும் கலாசார அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நிர்வாண ஓவியங்களை காண ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் மைல்லோ மோயர்(Milo Moire Age-32) என்ற சுவிஸ் ஓவியரும் அங்கு வந்திருந்தார், ஆனால் அவர் நிர்வாணமாய் வந்தது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மேலும் குழந்தை ஒன்றையும் தன் கையில் நிர்வாணமாய் ஏந்தியபடி வந்த இவரது சர்ச்சைக்குரிய செயலால், அவ்விடத்தை விட்டு பலர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பார்வையாளர் ஒருவர் கூறுகையில், நிர்வாண ஓவியங்கள் கண்காட்சி என்பதற்காக ஒரு பெண்ணும் இவ்வாறு நிர்வாணமாய் வருவது வேடிக்கையாய் உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் இவரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment