Sunday, February 22, 2015

ஈழ உணர்வை விற்று வாக்குப் பிச்சை கேட்டாரா ஜெசிக்கா..?



“ஐயோ இந்தப் பிள்ளை பாட்டுப் பாடினதும் போதும் இவங்களோட படுறபாடும் போதும்” என்று உங்களுக்குத் தலை தலையாக அடிக்கத் தோணும். ஒண்டுமே செய்யேலாது. வேற வழியில்ல..! ஜெசிக்கா ஈழ உணர்வை விற்று வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்ற தவறான
கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்தப் பதிவை உக்காந்திருந்து படித்தால் நன்றாக இருக்கும்.
முதலில் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் பயணத்தில் ஜெசிக்கா பாடிய முக்கிய பாடல்களின் லிஸ்டை கவனமாக பாருங்கள்.
01. கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
02. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
03. புத்தம் புதுகாலை பொன்னிற வேளை
04. எக்ஸ் மச்சி வை மச்சி எஃப் எம் மிர்ச்சி
05. அட என்னாத்த சொல்வேனுங்கோ
06. என்ன என்ன வார்த்தைகளோ
07. தென்கிழக்கு சீமையிலே
08. என் புருஷன் தான் எனக்கு மட்டும்
09. மாயம் செய்தாயோ நெஞ்சை
10. விடை கொடு எங்கள் நாடே
11. கருணை மழையே மேரி மாதா
12. பாடு நிலாவே தேன் கவிதை
13. தில்லானா தில்லானா நீ
14. ரம் பம் பம் ஆரம்பம்
15. என் வானிலே ஒரே வெண்ணிலா
16. புல்வெளி புல்வெளி
17. குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
18. காதோடுதான் நான் பேசுவேன்
19. சகாயனே சகாயனே
20. ஆடவரெலாம் ஆடவரலாம்
21. ஒரு இனியமனது இசையை
22. சீர் கொண்டு வா வெண்மேகமே
23. பனிவிழும் இரவு நனைந்தது
24. அழகுநிலவே கதவு திறந்து
25. அன்று வந்ததும் அதே நிலா
26. ஜூலை மாதம் வந்தால்
27. மலரென்ற முகம் இங்கு சிரிக்கட்டும்
28. நெஞ்சினிலே நெஞ்சினிலே
29. கடவுள் வாழும் கோயிலிலே
30. என் நெஞ்சு சின்ன இலை
31. வாராயோ வாராயோ காதல் கொள்ள
32. நினைவோ ஒரு பறவை
33. அம்மாடி அம்மாடி நெருங்கி
34. காதல் ஓவியம் பாடும் காவியம்
35. மன்னிப்பாயா
36. முன்பே என் அன்பே வா
37. பூ பூக்கும் ஓசை அதை
38. காற்றினிலே வரும் கீதம்
39. அந்தி மயங்குதடி
40. வேதம் அணுவிலும் ஒரு நாதம்
41. பார்த்த ஞாபகம் இல்லையோ
42. அத்தான் என்னத்தான்
43. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை
44. தூது வருமா
45. காலகாலமாக வாழும்
46. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
47. முதல் முறை பார்த்த
48. பாடவா உன் பாடலை ( வைல்ட் கார்ட் )
49. சில்லென ஒரு மழைத்துளி ( வைல்ட் கார்ட் )
50. ராசாவே உன்ன நம்பி
51. நெஞ்சம் மறப்பதில்லை ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
52. மார்கழி திங்கள் அல்லவா ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
53. இது ஒரு நிலக்காலம் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
54. நல்லதோர் வீணை செய்தே ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
55. வெள்ளைப் பூக்கள் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
சூப்பர் சிங்கர் பயணத்தில் பாட ஆரம்பித்த ஜெசிக்கா மெல்ல மெல்ல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். Top 25, Top 15, Top 10 என்று படிப்படியாக ஜெசிக்கா முன்னேறி வந்தார். அந்த நேரத்தில் யாருமே வாக்களிக்கவில்லை. மேலும் நல்ல நல்ல பாடல்கள் பாடி Top 6 கு முன்னேறினார். அப்போதும் யாருமே வாக்களிக்கவில்லை. ஈழ உணர்வு பிரச்சனையும் இல்லை. ஒரு மயிரும் இல்லை.
பின்னர் இடையில் ஒரு சின்ன பிரேக். பிறகு Direct finalist ஆக 3 பேர் தெரிவு செய்யப்பட , 4 வதாக ஒருவரை தெரிவு செய்யவேண்டிய சூழல். அதற்காகத்தான் Wild Card Round வைத்தார்கள். இந்த Wild Card ல் மீண்டும் பாட வந்தார் ஜெசிக்கா..! – இப்போதுதான் வாக்களிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது மக்களின் வாக்குகள் யாருக்கு அதிகமாக கிடைக்கிறதோ அவரே 4 வது Finalist ஆக தெரிவு செய்யப்படுவார்.
இப்போதுதான் ஜெசிக்காவுக்கு வாக்குகள் தேவைப்படுகின்றன.
தனக்கான வாக்குகளை ஜெசிக்கா மக்களிடம் வேண்டினார். எப்படி வேண்டினார்? “ஐயா நான் ஈழத்தைச் சேர்ந்தவள். எனது உறவுகள் பல முள்ளிவாய்க்காலில் மாண்டு போயினர். தயவு செய்து எனக்கு ஓட்டு போடுங்கோ” என்றா வேண்டினார்? அல்லது,
“ஐயா நான் ஒரு ஈழத்தமிழ் பெண். எங்கள் நாட்டில் ஊரிப்பட்ட பிரச்சனைகள் இருக்கு. எனக்கு எல்லோரும் ஓட்டு போடுங்கோ” என்றா வேண்டினார்?
இல்லவே இல்லை..! – அந்த தங்கை பின்வருமாறு வாக்கு கேட்டாள்.
Hi Friends, I will be performing in Wild Card Finals and Public voting for the 4th finalist will start next Monday, January 19th. Here are the ways you can vote for me
1. Online – Visit www.supersinger.in website and follow the instructions.
2. SMS – Type SSJ10 and send to 57827 – This option is not available outside India
3. Airtel customers can call 5432178 – This option is not available outside India
As people outside India can vote online only, please ask your family and friends in India to vote for me as well. Each and every vote counts, I need all your support to make to the final.
தமிழில்,
நான் கனடாவில் இருந்து இந்தியா சென்று இந்த போட்டியில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இனி அந்த இறுதிச் சுற்றுக்கு செல்வது உங்களது கையில்தான் உள்ளது. நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால், தயவு செய்து எனக்கு உங்களது வாக்குகளை மறக்காது வழங்கவும். அத்துடன் உங்களது உறவினர், நண்பர்களையும் எனக்கு வாக்களிக்கும்படி கூறவும். நீங்கள் பின்வரும் முறைகளில் வாக்களிக்க முடியும்.
ஜெசிக்காவின் வேண்டுகோள் இப்படித்தான் இருந்தது. அதுவும் “நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால்” என்பதை பலமுறை அழுத்தமாக ஜெசிக்கா சொன்னார். இதற்கான வீடியோ பதிவிலும் இதைத்தான் சொன்னார். இந்த வாக்குகள் கேட்கும் காலப்பகுதியில் ஜெசிக்கா என்ன பாடல்கள் பாடியிருப்பார்?
’விடை கொடு எங்கள் நாடே’ பாடி சிம்பதி கிரியேட் பண்னினாரா? அல்லது மேடையிலே அழுது ஒப்பாரி வைத்தாரா? அல்லது நான் ஈழத்தவள் என்று பேச்சுவாக்கிலே சொன்னாரா? எதுவுமே இல்லை. ஜெசிக்கா தன் திறமையை மட்டுமே நம்பினார். அவர் Wild Card Round ல் பின்வரும் பாடல்களைப் பாடினார்.
51. நெஞ்சம் மறப்பதில்லை ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
52. மார்கழி திங்கள் அல்லவா ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
53. இது ஒரு நிலக்காலம் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
54. நல்லதோர் வீணை செய்தே ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
55. வெள்ளைப் பூக்கள் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
இந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருந்த காலத்தில் தான் அவருக்கு மலைபோல வாக்குகள் குவியலாயின. வாக்களித்த நாமோ அவர் என்ன பாடுகிறார் என்பது குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை. எங்கள் சிறுமி ஒருத்தி பாடுகிறாள், அவளை முன்னேற்றிவிடுவோம் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுமே வாக்களித்தோம். ஆனால் மறுபக்கத்தில் ஜெசிக்கா தன் திறமைகளையும் நிரூபிக்க தயங்கவில்லை.
கடைசியில் Wild Card Round ல் மிக அதிக வாக்குகள் பெற்று Finalist ஆக தெரிவானார் ஜெசிக்கா. இப்போது மறுபடியும் வாக்களிக்கும் முறை. இம்முறை ஜெசிக்கா வாக்களிக்க கோரவேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை. அவரது ரசிகர்கள் எல்லோரும் முதலியே சமூக வலைத்தளங்களில் வாக்களிப்பது குறித்து பேசலாயினர்.
இறுதிப் போட்டிக்கு வாக்களிக்கும் முறையில் சில மாற்றங்கள் வந்தன. அதாவது 13.02.2015 அன்று 200 வாக்குகளும் 19.02.2015 அன்று 200 வாக்குகளும் போட்டி நடைபெறும் போது 100 வாக்குகளும் அளிக்கலாம் என்பதே அந்த மாற்றம். இறுதிப் போட்டி நடந்தது 20 ம் திகதி. ஆனால் ரசிகர்களோ 13 மற்றும் 19 ஆகிய திகதிகளில் தங்களுக்கு உண்டான 400 வாக்குகளையும் செலுத்திவிட்டார்கள்.
20 ம் திகதி இறுதிப் போட்டி நடக்கிறது. அன்று காலையிலேயே அந்த 100 வாக்குகளையும் செலுத்தக் கூடியதாக இருந்தது. நான் எல்லாம் பிரான்ஸ் நேரம் 15.00 மணிக்கு முன்னரேயே 100 வாக்குகளையும் போட்டு முடித்துவிட்டேன். பின்னர் இந்திய நேரம் இரவு 20.00 மணிக்கு பின்னர் ஜெசிக்கா மேடையில் பாடுகிறார் “தோல்வி நிலையென நினைத்தால்” என்ற பாடலை.
இப்ப சொல்லுங்க, ஜெசிக்காவின் அந்தப் பாடலை பார்த்து உணர்ச்சிவசப்பட்டா நாம் வாக்களித்தோம்? உண்மையில் இறுதிப் போட்டியில் தோல்வி நிலையென மற்றும் விடைகொடு ஆகிய பாடல்களை ஒன்றாக கலந்து ஜெசிக்கா பாடுவார் என்று நாம் என்ன கனவா கண்டோம்? அல்லது மூக்குச் சாத்திரம் பார்த்தோமா?
இதே இறுதிப் போட்டியில் ஜெசிக்கா “லாலாக்கு டோல் டப்பிம்மா” என்ற பாடலைப் பாடியிருந்தாலும் கூட நாம் வாக்களிக்கவே செய்திருப்போம். எங்கள் பிள்ளை என்பதற்காக நாம் வாக்களித்தோம். அவ்வளவுதான். இதில் எங்கு ஜெசிக்கா ஈழத்தை விற்றார்? வாக்குப் பிச்சை கேட்டார்?
( இதற்கிடையில் வைல்ட்கார்ட் சுற்றில் அனுஷ்யா “பறை பறை” பாட்டைப் பாடி எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்தார். மறுநாள் வலைத்தளங்கள் எங்கும் அனுஷாவின் பாடலே வைரலாக பரவியது. அனுஷியாவுக்கான ஆதரவும் பல்கிப்பெருகியது. எங்கள் நண்பர்களில் சிலரும் அனுஷ்யாவுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டினார்கள். நானும் அனுஷ்யாவுக்கு வாக்குப் போட்டேன். )
ஜெசிக்கா இன்னொரு அழகான வேலை செய்தார். ஃபேஸ்புக்கில் தனது Official Page ஐ ஆரம்பித்து அதை நாள் தோறும் ஒழுங்காக அப்டேட் செய்து வந்தார். 2014.06.09 அன்று அவரின் பேஜ் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 150 – 200 வரையான லைக்குகள் பெற்றார். பின்னர் போகப் போக 3500 – 4500 வரையான லைக்குகள் ஒவ்வொரு போஸ்டுக்கும் பெற்றார். இதன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி அதை நீட்டாக மெயிண்டெயின் பண்ணினார். சூப்பர் சிங்கரில் வேறு எந்த போட்டியாளரும் Facebook Page ஐ சரியாக கையாளவில்லை.
ஜெசிக்கா “தோல்வி நிலையென” என்று பாட ஆரம்பித்த பின்னர்தான் ஓட்டுக்கள் போடப்பட்டிருக்குமாயின் அந்த நேரத்தில் ஒருவரால் வெறும் 100 ஓட்டுக்கள் மட்டுமே போட முடிந்திருக்கும். பாடலைக் கேட்ட பின்னர் இந்தியாவில் இருந்து எத்தனைபேர் SMS மூலம் வாக்குகள் போட்டிருப்பார்கள் என்பது கணிசமான ஒரு எண்ணிகையாக இராது.
இப்ப சொல்லுங்கள் – ஜெசிக்கா ஈழ உணர்வை காட்டி / விற்று / பயன்படுத்தியா ஓட்டுக்கள் பெற்றார்? ஒரு கருத்தை முன்வைக்கும் முன்னர் யோசிக்க வேண்டாமா? எனக்குத் தெரிந்து ஈழ உணர்வு நாசமா போகுதே என்று கூச்சல் போட்ட பலர் சூப்பர் சிங்கர் பார்ப்பதே இல்லை
ஜெசிக்கா ஈழத்தமிழ் பின்புலம் கொண்டவர் என்பதால் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள் அதிகளவில் ஓட்டுக்கள் போட்டார்கள். இதில் என்ன தவறு? இந்தியா World Cup ஜெயிச்சா இந்திய மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்வதில் என்ன தப்பு? அதுபோலத்தான்..!
ஜெசிக்கா மட்டுமில்லை, வரப்போகும் “சூப்பர் சிங்கர் 5 “ இல் இன்னொரு ஈழத்தமிழ் பாடகனோ பாடகியோ கலந்துகொண்டால், மறுபேச்சு ஏதும் இன்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் வாக்களிக்கவே செய்வார்கள். இது நச்சுரல்..!!
இதற்கிடையில் விஜய் Tv தன் TRP ஐ அதிகரிக்கவே ஈழத்தை பயன்படுத்துகிறது என்ற மொக்கை காமெடியை யாருமே சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இல்லை அதிலும் உங்களுக்கு சந்தேங்கள் என்றால் இன்னொரு பதிவை மாய்ஞ்சு மாய்ஞ்சு டைப் பண்ணோணும்.
இனிமேலாவது ஜெசிக்கா ஈழத்தை விற்றுவிட்டார் என்று புசத்த வேண்டாம் – சகிக்கல..!

 http://ta.newstig.com/single-standard.php?pid=12768

No comments:

Post a Comment