Thursday, February 19, 2015

அடுத்தவரின் மனைவியிடம் துணை ஜனாதிபதி மறைமுக லீலைகள்: கொந்தளிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு) !

அமெரிக்க துணை ஜனாதிபதி பாதுகாப்பு துறை செயலாரின் மனைவியின் மிக அருகில் சென்றது குறித்து பலரும் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக பதவியேற்ற ஆஷ் கார்டருக்கு(Ash Carter) துணை ஜனாதிபதி ஜோ பிடன்(Joe Biden) பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்த விழாவின்போது, மேடையில் ஆஷ் கார்டரின் மனைவி ஸ்டெப்பினி கார்டரின்(Stephanie Carter) பின்புறமாக நின்ற ஜோ பிடன், அவரின் தோள்கள் மீது கைகளை வைத்து, காதுக்கு அருகில் வந்து ஏதோ கூறியுள்ளார்.
இந்நிலையில் மற்றொரு நபரின் மனைவிக்கு இத்தனை அருகிலா ஒரு துணை ஜனாதிபதி செல்வது? என பலரும் அவரை டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து டுவிட்டரில் நபர் ஒருவர் கூறுகையில், உலகிலேயே மிகவும் சந்தோஷமான வேலைகளில் ஒன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவி தான் என கிண்டலடித்துள்ளார்.

No comments:

Post a Comment