Thursday, February 12, 2015

கையில் கத்தியுடன், கூல்ட்ரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்த பெண்ணை சுட்டு கொன்ற....

கத்தியுடன் நடமாடியபடி கூல்டிரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை சிட்னி நகர போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஹோக்ஸ்டன் பார்க் பகுதியிலுள்ளது ஹங்ரி ஜேக்ஸ் என்ற ரெஸ்டாரண்ட். அதன் வெளியேயுள்ள கார்பார்க்கிங் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் 20 செ.மீ நீளமுள்ள கிச்சன் கத்தியுடன் சுற்றிதிரிவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மதியம் அழைப்புகள் வந்து குவிந்தன.
இதையடுத்து போலீஸ் குழு ஒன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், கத்தியை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடுமாறு எச்சரித்தனர். ஆனால் அந்த பெண்ணோ கூல்ட்ரிங்ஸ் குடித்தபடியே, போலீசாரை நோக்கி முன்னேறினார். அப்போது குடைமிளகாய் ஸ்பிரேவை பெண்ணை நோக்கி அடித்து திணறச் செய்ய போலீசார் முயன்றனர். அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனிடையே போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணின் மார்பை நோக்கி சுட்டார். குண்டு பாய்ந்த பெண் அலறி துடித்து கீழே விழுந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கத்தியோடு நின்ற பெண்ணை உயிரோடு பிடிக்க மேற்கொண்டு முயலாமல், நெஞ்சை நோக்கி எப்படி சுடலாம் என்ற கேள்வியை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.
http://www.athirvu.com/newsdetail/2265.html

No comments:

Post a Comment