Wednesday, February 25, 2015

பன்னீர் குடத்தோடு பிறந்த குழந்தை: 80,000 ஆயிரம் பேரில் ஒருவருக்கு தான் இப்படி நடக்கும் என்கிறார்கள் !

பெண்கள் கருத்தரித்தால் , அவர்களது சிசு வயிற்றில் உள்ள கருவறையில் வளர ஆரம்பிக்கிறது. கருவறை என்று நாம் குறிப்பிடுவது ஒரு நீர் நிறம்பிய பையை தான். இந்த நீர் நிறம்பிய பைக்குள் தாள் சிசு வளர்கிறது. இதனையே நாம் பன்னீர் குடம் என்று கூறுகிறோம். 10 மாதங்களில் பின்னர் , குழந்தை பிறக்க ஆரம்பிக்கும்வேளை அந்த பன்னீர் குடம் உடைந்துவிடும். அதன் பின்னரே குழந்தை பிறக்கும். இதுவே உலக நியதி. ஆனால் சிலவேளைகளில் மட்டும் அபூர்வமாக , அந்த பன்னீர் குடம் உடையாமலே பிள்ளை பிறந்து விடுகிறது.
இவ்வாறு நடப்பது மிகவும் அரிது என்கிறார்கள். 80,000 ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், அதில் சிலவேளை ஒரு குழந்தை மட்டுமே இப்படி பிறக்கிறது. அதுபோல சமீபத்தில் லண்டனில் இப்படி ஒரு குழந்தை பன்னீர் குடத்தோடு பிறந்துள்ளது. இது சிலவேளைகளில் ஆபத்தில் போய் முடியலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம் என்னவென்றால் , வழமையாக பன்னீர் குடத்திற்குள் 10 மாதமாக இருக்கும் குழந்தை ஒருபோதும் அதனுள் இருக்கும் தண்ணீரை குடிப்பது இல்லை. அதற்குள் இருக்கும் தண்ணீரில் பல பதார்த்தங்கள் மற்றும் கழிவுகள் காணப்படுகிறது.
ஆனால் சிலவேளை இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் , அந்த தண்ணீரை குடித்துவிடும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
http://www.athirvu.com/newsdetail/2388.html

No comments:

Post a Comment