Wednesday, February 11, 2015

63 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு: ராகுல் காந்தி கடும் அதிர்ச்சியாமே ?

டெல்லியில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. அதில் "ஆம் ஆத்மி" கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. 70 தொகுதிகளில் 67 இடங்களில் வென்றது. 3 தொகுதிகளையே இதர கட்சிகள் பெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் ப.ஜ.க கட்சிகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது மிகவும் பரிதாபமே. 70 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றனர். 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
அந்த கட்சியின் முதல்– மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜய்மக்கான், கிரண்வாலியா, யோகானந்த் சாஸ்திரி, ஹாரூப் யூசுப் போன்ற முன்னணி தலைவர்களும் டெபாசிட் இழந்தனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும் டெபாசிட்டை இழந்தார். காங்கிரஸ் கட்சிக்கு 9.7 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. 2013–ல் டெல்லி சட்ட மன்ற தேர்தலில் 24.55 சதவீத ஓட்டுகளை பெற்று 8 இடங்களை கைப்பற்றியது. தற்போது 14.85 சதவீத ஓட்டுகள் காங்கிரசுக்கு குறைந்துள்ளது. இந்த ஓட்டுகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றது. ஆம் ஆத்மி கட்சி இரண்டு மடங்கு ஓட்டுகளை பெற்றுள்ளது. 2011–ல் 29.49 சதவீத ஓட்டுகளை பெற்ற அந்த கட்சி தற்போது 54.3 சதவீத வாக்குகளை பெற்றது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட வரலாறு காணாத தோல்வியாலும், ஒட்டுகள் கணிசமாக குறைந்ததாலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து அவர் மீடியாவிடமோ, அல்லது சமூக இணைய தளத்திலோ தனது கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காங்கிரசின் இந்த தோல்வியால் ராகுல்காந்தி, சோனியாவின் தலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு ஆம் ஆத்மி தற்போது சுனாமி அலையாக மாறி டெல்லியில் அமோக வெற்றியை பெற்றது. ஆனால் தேசிய கட்சியான காங்கிரசால் அதில் இருந்து மீள முடியாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.
உத்தரபிரதேசம், பீகார், தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஒடிசா, மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் இனி எப்படி எதிர் கொள்ள போகிறது என்பது தான் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால தேர்தல்களில் வெற்றியை பெற பிரியங்காவை களம் இறங்க வேண்டிய நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்ததில் ஈழத் தமிழர்களுக்கு சோனியா காந்தி செய்த செயல், வினையாக உருவெடுத்து வாட்டி வதைக்கிறது !
http://www.athirvu.com/newsdetail/2249.html

No comments:

Post a Comment