Thursday, February 5, 2015

இன்னும் சில நாட்களில் லண்டனை தாக்கவுள்ள கடும் பனி புயல்: - 5 க்கு செல்லும் என்கிறார்கள் !


ஆட்டிக் சர்கிளில் ஏற்பட்டுள்ள வெடிப்பு ஒன்று காரணமாக அங்கிருந்து வெளியாகியுள்ள குளிர் காற்று, பிரித்தானியாவை நோக்கி நகர்வதாக கலா நிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் உள்ள மலைப்பகுதியில் உள்ள ஒருவகை தாழமுக்கம் காணப்படுவதால் அங்கிருந்தும் குளிர்ந்த காற்று தற்போது பிரித்தானியாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இதனால் அடுத்து வரும் சில நாட்களில் லண்டனில் மத்திய பகுதி, வட பகுதி மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்ப நிலை - 5 க்கு செல்லவுள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம், சரே மற்றும் வெம்பிளி, ஹரோ , எட்ஜ்வேர் , கிங்ஸ்பெரி போன்ற பகுதிகளும் இதில் அடங்குகிறது.
மொத்தமாகச் சொல்லப்போனால் ஈஸ்ட்ஹாம், இல்பேட் போன்ற நகரங்களும் இதனால் பாதிப்படைய உள்ளது. எனவே சிலவேளை பாரிய பனிப்பொழிவு ஏற்படலாம். இல்லையென்றால் கடும் குளிர் நிலவ வாய்ப்புகள் உள்ளது. இந்த மாற்றத்தால் பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. காச்சல் , ஜலதோஷம், விறைப்பு , நெஞ்சு வலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் அனைவரும் காலநிலைக்கு ஏற்றவாறு, தங்கள் உடுப்புகளை போட்டுக்கொள்வது நல்லது.
மே 18 நினைவு தினம் நடைபெறும் ரவல்கர் சதுக்கத்தில் உள்ள , நீர் ஊற்றுகள் ஏற்கனவே உறைந்துவிட்டது.


No comments:

Post a Comment