Monday, February 16, 2015

21 எகிப்திய கிறிஸ்தவர்கள் தலையைவெட்டி கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்: மீண்டும் வெறியாட்டம் (வீடியோ இணைப்பு)!~

ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவில் 21 எகிப்திய கிறிஸ்தவர்களின் தலையைவெட்டி அதன் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மூன்றாம் திகதி ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை வெளியிட்டனர்.
இச்சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை ஜோர்டான் அதிகரித்தது. மேலும், ஜோர்டானுக்கு அதன் நட்புநாடுகள் உதவி செய்தன.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது லிபியாவில் 21 எகிப்திய கிறிஸ்தவர்களின் தலையைவெட்டி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த எகிப்தியர்கள் 21 பேரும் லிபியாவில் பிடிக்கப்பட்டவர்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவத்தை பின்பற்றும் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி என்று இரத்தத்தால் எழுதப்பட்ட தகவலுடன் வெளியிடபட்டுள்ள அந்த வீடியோவில், பிடிபட்டவர்களை ஆரஞ்சு நிற உடையணிந்து அழைத்து சென்று லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள கடற்கரைப் பகுதியில் வைத்து தலையை வெட்டி கொலை செய்வது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சனவரி மாதம் 21 எகிப்திய கிறிஸ்தவர்களை பிணைக் கைதியாக பிடித்துள்ளோம் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கூறினர்.
தற்போது சிரியா, ஈராக்கை அடுத்து லிபியாவிலும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கால்பதித்துள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் 34 ஆண்டுகளாக நடந்து வந்த கடாபியின் ஆட்சி 2011 முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
எகிப்திய அதிபர் அப்தெல் பட்டா அல்-சிசி, எகிப்திய கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், எகிப்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment