Thursday, February 12, 2015

200 மில்லியனை தானமாகப் பெறும் இந்தியா: விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிறது ?


உதவித்திட்டம் என்ற போர்வையில் , ஆண்டு ஒன்றுக்கு பிரித்தானியா சுமார் 600 மில்லியன் பவுன்டுகளை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. அவற்றை எடுத்து நாட்டை அபிவிருத்திசெய்யாமல் சந்திரணுக்கு ராக்கெட்டை அனுப்புகிறது இந்தியா என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியா கடந்த வருடம் விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவுவதற்கு மட்டும் சுமாட் 250 மில்லியன் பவுன்டுகளை செலவு செய்துள்ளது. இன் நிலையில் பிரித்தானியா ஏன் , இந்தியாவுக்கு உதவவேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. பிரித்தானியா இந்த உதவியை ஏன் வழங்கவேண்டும் ? என்றும் இதற்கு அமைச்சர் பொறுப்பு கூறவேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ளது.
அமைச்சர் ஜஸ்டின் கிறீனிங் இதுதொடர்பாக எதனையும் தெரிவிக்காமல் நழுவியுள்ளார். பிரித்தானியாவில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் நிதி பற்றாக்குறை காரணமாக NHS தடுமாறுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்த பணத்தை செலவு செய்யலாமே என்று எதிர்கட்சிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். பிரித்தானியா எதற்காக இந்த பணத்தை கொடுக்கிறதோ அதற்கான அதனை இந்தியா பாவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment