Wednesday, February 11, 2015

திருப்பதிக்கே லட்டு தந்தார்கள்: தேவஸ்தானத்தில் இருந்து 180 கோடி ரூபா மயமாகியுள்ளது !

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கிய, 180 கோடி ரூபாய், கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. திருமலை - திருப்பதி தேவஸ்தானம், ஆண்டுதோறும், 2,400 கோடி ரூபாய் அளவிற்கு, பட்ஜெட் போடுவதால், குட்டி அரசு போல் செயல்பட்டு வருகிறது. ஆந்திர அரசின் நிபந்தனையின்படி, தேவஸ்தானம், தன் வரவு மற்றும் செலவு கணக்கை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உள் தணிக்கை செய்து வருகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை, ஆந்திர அரசின் தணிக்கை துறை அதிகாரிகள், சோதனை செய்து வருகின்றனர். தேவஸ்தான கணக்கு வழக்குகளை, செயல் அதிகாரி மற்றும் இரு செயல் இணை அதிகாரிகள், அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு சோதனை செய்யாததால், 180 கோடி ரூபாய் தேவஸ்தான கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக, ஆந்திர மாநில தணிக்கை துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதற்கான ஆவணங்களும் மாயமானது, அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேவஸ்தான கணக்கு வழக்கில், மத்திய அரசின் தணிக்கை துறை தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என, ஆந்திர அதிகாரிகள், மத்திய தணிக்கை துறைக்கு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/2245.html

No comments:

Post a Comment