Tuesday, February 17, 2015

1,70,000 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த ’நாசிச’ காவலாளி!

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சுமார் 1,70,000 கைதிகளை சித்ரவதை செய்து கொன்ற சம்பவத்தில், ஹிட்லரின் முன்னால் எஸ்.எஸ் காவலாளி ஒருவர் உடந்தையாக செயல்பட்டதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் ஹிட்லரின் அரசால், Auschwitz என்ற சித்ரவதை கூடம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் அதில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 1943ம் ஆண்டு சனவரி மாதம் முதல் 1944ம் ஆண்டு யூன் மாதம் வரை அந்த சித்ரவதை கூடத்தை பாதுகாத்த காவலர்களில் ஒருவர் மீது, ஜேர்மனிய நீதிமன்றம் சுமார் 1,70,000 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் உடந்தையாக செயல்பட்டதாக தற்போது குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது 93 வயதுடைய அந்த முன்னால் எஸ்.எஸ் (SS) காவலருக்கு, நாசிச அரசின் கொலை செய்யும் பாணிகள் அனைத்தும் தெரிந்திருந்தது எனவும் அவர் ஆயிரக்கணக்கான நபர்கள் கொல்லப்பட்டதிற்கு துணையாகவும் கைதிகளை கொல்லும் முறைகளை எளிமையாக்கும் பணிகளிலும் ஈடுப்பட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தன்னை போலுள்ள சிறிய அதிகாரிகளின் காவலில் கைதிகள் இருந்தால் அவர்களை திட்டமிட்டு கொல்வது மிக சாத்தியமானது என அவருக்கு தெரிந்துள்ளது என்றனர்.
நாசிச படைகளால் நிகழ்ந்துள்ள போர்க்குற்றங்களை பற்றி ஆய்வு நடத்தி வரும் North-Rhine Westphalia என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தகவலில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னால் காவலாளி நாசிச சித்ரவதை கூடத்திற்கு காவலாக 1942ம் ஆண்டு சனவரி மாதம் பணியமர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ் சித்ரவதை கூடத்தின் தலைமை காவல் படைப்பிரிவின் ஒரு காவலரான அவர், அந்த சித்ரவதை கூடத்தை தீவிரமாக கண்காணிப்பதுடன் அங்கு ரயில்களில் வரும் கைதிகளை தெரிவு செய்யும் பொறுப்பிலும் இருந்ததாகவும், அவ்வாறு குறியீடு மூலம் தெரிவு செய்யப்படும் கைதிகளை உடனடியாக கொல்ல அனுப்படுவார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட அந்த முன்னால் காவலர், தான் Auschwitz சித்ரவதை கூடத்தில் பணியமர்த்தப்பட்டது உண்மை தான் என்றும் ஆனால் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக செயல்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், நாசிச முன்னால் காவலாளி மீது எழுந்துள்ள இந்த பரபரபான குற்றச்சாட்டை நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment