Saturday, January 10, 2015

பாரிஸ் தீவிரவாதிகள் இருந்த இடத்தில் மறைந்து இருந்து பொலிசாருக்கு SMS அனுப்பிய நபர் இவர் தான் !

பிரான்சில் தற்போது நடந்து முடிந்துள்ள முற்றுகை சற்று ஓய்வடைந்துள்ளது. 3 இஸ்லாமிய தீவிரவாதிகளையும் பொலிசார் சுற்றிவளைத்தவேளை, அவர்களில் இருவர் அச்சகம் ஒன்றினுள் புகுந்துகொண்டார்கள். மூன்றாவது நபரே கடை ஒன்றுக்குள் புகுந்து 6பேரை பணயக் கைதிகளாக்கினார். இந்த அச்சகத்தில் புகுந்துகொண்ட 2 தீவிரவாதிகளும்(சகோதரர்கள்) அங்கே வேலைபார்த்த சிலரை பணயக் கைதிகளாக்கினர். ஆனால் அவர்கள் அச்சகத்திற்குள்(prinitin press) வருவதை முன்னரே கண்டு விட்ட 27 வயதான, லிலாந் லெப்பரா என்னும் இளைஞர் ஓடிப்போய் ஒரு பெட்டிக்குள் ஒளிந்துகொண்டார். இவரை தீவிரவாதிகள் இறுதிவரை காணவில்லை. மிகவும் துணிச்சலான இந்த இளைஞர் தனது மோபைல் போனை எடுத்து முதலில் சலன்டில்(Silent Mode) விட்டுள்ளார்.
பின்னர் பொலிசாருடன் SMS மூலம் தொடர்புகொண்டுள்ளார். (ஏன் என்றால் பேசமுடியாது அல்லவா). இந்த திகில் நிறைந்த நேரத்தில் பொலிசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் SMS மூலமே பதிலை வழங்கி, எத்தனை பேர் பணயக் கைதிகளாக உள்ளார்கள். எப்படி ஆச்சகத்தினுள் வேறு வழியால் வரமுடியும். அங்கே என்ன என்ன இருக்கிறது என்பதனை எல்லாம்SMS மூலமாகவே அனுப்பிவிட்டார். இது பொலிசாருக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. இந்த 27 வயது இளைஞர் கொடுத்த தகவலை வைத்து, பொலிசார் உள்ளே புகும் மார்கத்தையும் கண்டு பிடித்தார்கள். இதன் காரணமாகவே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இளைஞர் ஒரு ஹீரோ தான் என்று பொலிசார் கூறியுள்ளார்கள்.
ஆனால் ஆபிரிக்க தீவிரவாதியை பிடிக்க எடுத்த முயற்சி தான் சொதப்பலில் முடிவடைந்து 4 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.


No comments:

Post a Comment