Wednesday, January 7, 2015

பிரித்தானிய பணயக் கைதியை வைத்தே ஆவணம் படம் தயாரித்துள்ளது ISIS இயக்கம்: இது எப்படி இருக்கு ?


ISIS தீவிரவாதிகள் கைகளில் வெளிநாட்டவர்கள் சிக்கினால் போதும். அதிலும் அமெரிக்கா அல்லது பிரித்தானிய நபர் சிக்கினால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். உடனே தலையை துண்டித்துவிடுவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரை ISIS தீவிரவாதிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவரைக் கொல்லவில்லை. அட ஏன் இந்த நபருக்கு எதுவுமே நடக்கவில்லை என்று சில நாடுகள் தலையை பிய்த்துக்கொண்டு இருக்க அதற்கான விடை கிடைத்துவிட்டது.
FROM INSIDE “MOSUL” என்னும் 8 நிமிட ஆவணப் படத்தை தீவிரவாதிகள் இன் நபரைக் கொண்டே தயாரித்து இன்ரர் நெட்டில் வெளியிட்டுள்ளார்கள்.கடந்த ஜூன் மாதத்தில் இந்த நகரம் ISIS இயக்கத்தால் கைப்பற்றப்பட்டது. அப்போது சுமார் 2,000 ஷியா இனத்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்களை அந்த இயக்கம் கொலை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பு மையம் கூறியிருந்தது. அப்போது முதல் இந்த நகரம், ISIS இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ISIS இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் கடுமையாக ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மக்கள் அடிமைகள் போல வாழ்கிறார்கள் என மேலை நாட்டு மற்றும் சில அரபு நாட்டு மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்க நினைத்திருக்கிறது போலும் ISIS.
ISIS இயக்கத்திடம் பணயக் கைதியாக சுமார் 2 ஆண்டுகளாக உள்ள 43 வயதான கான்ட்லி, 8 நிமிடங்கள் நீளமுள்ள இந்த வீடியோவில் தோன்றுகிறார். மொசுல் நகரத்தின் ஒரு மார்க்கெட், வைத்தியசாலை, மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இவர் விஜயம் செய்வது படமாக்கப்பட்டுள்ளது. ட்ராவல் டாக்குமென்ட்ரி ஸ்டைலில் ஆரம்பிக்கும் வீடியோவில் கேமராவை பார்த்துப் பேசும் கான்ட்லி, “ISIS இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் என்ன நடக்கிறது என்பதை மீடியாக்கள் சரியாக காண்பிக்க தவறுகின்றன. இந்த நகரங்களில் மக்கள் சங்கிலிகளால் கட்டப்பட்ட அடிமைகள் போல நடக்கிறார்கள். மிகக் கடுமையான சட்டங்களால் துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்பதுபோல மீடியாக்கள் தகவல் வெளியிடுகின்றன.
ஆனால் அது உண்மையல்ல, மொசுல் நகரத்தில் எல்லாமே இயல்பாக எந்தவித அழுத்தமும் இன்றி நடைபெறுகின்றன. மக்கள் தமது இயல்பு வாழ்க்கை முறையில்தான் வாழ்கிறார்கள்” என்று பேசுவது ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரைச் சுற்றியும் மக்கள் இயல்பாக நடமாடுவதாக பின்னணிக் காட்சிகள் தெரிகின்றன. ISIS இயக்கத்தின் திடீர் வெற்றிக்கு காரணமே, பிரசார வீடியோக்கள்தான். நீண்டகாலமாக உலகின் அதி அச்சுறுத்தல் தீவிரவாத இயக்கமாக கருதப்பட்டு வந்த அல்-காய்தாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, குறுகிய காலத்தில் ISIS இயக்கம் முதலிடத்துக்கு வந்துள்ளது. சிரியாவிலும், ஈராக்கிலும் இந்த இயக்கத்தின் சார்பில் யுத்தம் புரியும் ஆட்களில் பெரிய சதவீதத்தினர், வெளிநாட்டவர்களே.
பிரசாரம் மூலமாகவே, வெளிநாட்டவர்களை கவர்ந்து தமது இயக்கத்தில் இணைய வைக்கிறது, ISIS. இதுவும், அப்படியான ஒரு முயற்சியே - business as usual என்று வீடியோவில் காண்பிக்கிறார்கள்!


No comments:

Post a Comment