Monday, January 19, 2015

குழந்தைகள் ஏன் பாலியல் அடிமையாக்கப்படுகின்றனர்? சிறுமியின் கேள்வியால் நிலைகுலைந்துபோன போப்பாண்டவர் (வீடியோ இணைப்பு)



பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த போப் பிரான்சிஸ் உரையாற்றிபோது ஏழை சிறுமி ஒருவர் எழுப்பிய கேள்வியால் வாயடைத்து போயுள்ளார்.பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் போப் பிரான்சிஸ் சிறப்புரை வழங்க சென்றிருந்தபோது, வீடில்லா ஏழை சிறுமி (12) ஒருவர் கண்ணீருடன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அவர் கேட்டதாவது, குழந்தைகள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்கின்றனர். ஆனால், அந்த குழந்தைகள் தான் போதை தரும் தீயப்பழக்கங்களுக்கும், பாலியல் வன் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
எந்த தவறும் செய்யாத இவர்களை கடவுள் ஏன் இந்த நிலைக்கு உள்ளாக்கி இருக்கிறார்? என கண்ணீருடன் கேட்டுள்ளார்.
இவ்வாறு ஒரு கேள்வியை சற்றும் எதிர்ப்பார்க்காத போப், அந்த சிறுமியை அருகில் அழைத்து அன்போட கட்டி தழுவி கொண்டுள்ளார்.
இதன்பின் சிறுது நேரம் கழித்து கூட்டத்தை நோக்கி, இந்த குழந்தை தான் முதன் முதலாக இப்படி ஒரு பதிலளிக்க முடியாத கேள்வியை என்னிடம் கேட்டுருக்கிறார்.
அவரால் தன்னுடை நிலையை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாமல் போனாலும், அவரது கண்ணீரால் வெளிப்படுத்தி விட்டார். அந்த சிறுமியை பார்த்து நான் வருத்த படுகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, குழந்தை தொழிலாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு தள்ள[ப்பட்ட குழந்தைகள், வறுமையில் வாடும் குழந்தைகள் மற்றும் தெருக்களில் அடிமைகளை போல் நடத்தப்படும் குழந்தைகளிடம் நீங்கள் அனைவரும் என்ன கற்றுக்கொண்டீர்கள் என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை பார்த்து போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment