Wednesday, January 28, 2015

குடாநாட்டைப் பாதுகாக்க தூய குடிநீருக்கான செயலணி உருவாக்கம்



யாழ்.மாவட்டம் எதிர்நோக்கியிருக்கும் நிலத்தடி நீர் அபாயத்திலிருந்து குடாநாட்டை பாதுகாப்பதற்காக மத்திய, மாகாண அரசாங்கங்கள் இணைந்து தூய குடிநீருக்கான செயலணி ஒன்றிணை உருவாக்கியிருக்கின்றது.
இன்றைய தினம் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே குறித்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலணி சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்துள்ளமை தொடர்பிலான ஆய்வினை மேற்கொள்ளும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் குழுவாக செயற்படும்.
அத்துடன் தற்காலிகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் பெற்றுக் கொடுப்பதற்கும் நீண்டகால அடிப்படையில் குடிநீருக்கான, வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்குமான பணிகளை குழு மேற்கொள்ளும்.
மேலும் இன்றைய கூட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இன்றைய தினம், உருவாக்கப்பட்ட குழுவில் இணைத் தலைவர்களாக வடமாகாண விவசாய அமைச்
சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் உபதலைவராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் பதவி வகிக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment