சவுதி அரேபியாவுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, தலையில் ஸ்கார்ப் அணியாதது குறித்து டுவிட்டரில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவரது மனைவியுடன், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் திகதி இந்தியா வந்தார். இந்நிலையில் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர்.
அங்கு, மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்திய ஒபாமா, புதிய மன்னர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சவுதியில் மிச்செல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும்.
இந்நிலையில் மிச்செல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து #ميشيل_أوباما_سفور (roughly, #Michelle_Obama_unveiled) என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 1,500 ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன.
மிஷல் இந்தோனேசியா சென்றபோது மட்டும் ஸ்கார்ப் அணிந்தாரே. சவுதி அரேபியாவில் மட்டும் ஏன் அணியவில்லை என்று சிலர் கேட்டுள்ளனர்.
அவசரமாக சவுதி வந்ததால் மிச்செலை யாரும் குறை கூறக்கூடாது என சிலர் அவருக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்துள்ளனர்.michel 1
michel 2
michel 3obama_saudi_002