Tuesday, January 6, 2015

வெளிநாடுகளில் வசிக்கும் கனேடியர்களின் வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆராய்கிறது.

ரோறொன்ரோ பொதுமக்களிற்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை?. விடுதலையான சிறுவர் பாலியல் குற்றவாளி ரொறொன்ரோவில்!.

0
79-வயதுடைய ஜேம்ஸ் அல்பிரட் கூப்பர் என்ற இந்த நபர் 21-வருட சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் தற்போது ரொறொன்ரோவில் வசிக்கின்றார். மீண்டும் குழந்தைகளிற்கெதிரான துன்புறுத்தல்களில் ஈடுபடலாம்  என்ற காரணத்தினால் பாலியல் குற்ற பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
1993-ல் இந்நபர் குற்றவாளியாக கண்டு கொள்ளப்பட்டார். அநாகரிகமான நடவடிக்கைகள், அநாகரிகமான தாக்குதல்கள், கற்பழிப்பு மற்றும் பாலியல் தொடர்புகள் போன்ற குற்றங்களை செய்துள்ளார். இவரது குற்றங்கள் 14-வயதிற்குட்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்டது.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அணுகுதல், பொது நீச்சல் தடாகங்கள் ,விளையாட்டு மைதானம், பொது பூங்கா போன்ற சிறுவர்கள் கூடும் இடங்களை அணுகுதல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 16-வயதிற்குட்பட்ட பிள்ளைகளை நெருங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
16-வயதிற்குட்டவர்களுடன் தொடர்புகொள்வது 16-வயதிற்குட்பட்ட பிளளைகளின் தாய் அல்லது சட்டரீதியான பாதுகாவலர் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்ள முன்னர் பொலிசாருக்கு தெரியப்படுத்த படவேண்டும் என்ற நிபந்தனையும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
police

- See more at: http://www.canadamirror.com/canada/36400.html#sthash.zVeyRc47.dpuf

வெளிநாடுகளில் வசிக்கும் கனேடியர்களின் வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆராய்கிறது.

0
ஐந்து வருட காலத்திலும் அதிகமான காலமாக வெளிநாடுகளில் வசிக்கும் கனேடியர்கள் சமஷ்டி தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அனுமதி மறுக்கும் தேர்தல் சட்டத்தின் பிரிவு அரசியல் சாசனத்திற்கு முரணானதென ஒன்றாரியோ மேல் நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சமஷ்டி அரசு தொடர்ந்த மேன்முறையீடு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
ஐந்து வருட காலத்திலும் அதிக காலமாக வெளிநாடுகளில் வகிக்கும் கனேடியர்கள் வாக்களிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நியாயமானதென சமஷ்டி அரசு கூறுகிறது. அது நியாயமற்றதெனவும், எழுந்தமானமான ஒரு தடையெனவும் வழக்கைத் தொடர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் இரண்டு கனேடியர்கள் கூறுகிறார்கள்.
- See more at: http://www.canadamirror.com/canada/36398.html#sthash.6eDeVhDh.dpuf

No comments:

Post a Comment