Thursday, January 8, 2015

பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு) !

பூமியை போன்று மனிதர்கள் வசிப்பதற்கு ஏதுவாக இரண்டு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமியை போன்ற புதிய கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக கெப்ளர் மிஷன் என்னும் தொலைநோக்கியை கடந்த 2009ம் ஆண்டு நாசா விண்வெளிக்கு அனுப்பியது.
இதுவரையிலும் 1,50,000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கண்காணித்துள்ள கெப்ளர், 4175 பூமியை போன்ற கிரகங்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக எட்டு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இவற்றில் இரண்டு கிரகங்கள் பெருமளவில் பூமியை போலவே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு கிரகங்களில் ஒன்றுக்கு கெப்ளர்- 438பி என்றும், இன்னொன்றுக்கு கெப்ளர்- 442பி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
இந்த கிரகங்களில் பாறைகள் உள்ளன என்றும், அதிகளவில் வெப்பமாகவும் இல்லாமல் அதே சமயம் குளிராகவும் இல்லாமல் தண்ணீர் இருப்பதற்கான‌ மிதமான தட்பவெப்பம் நிலவுவதாலும் இங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் பூமியில் இருந்து பல நூறு ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதால், இவற்றை பற்றி தெரிந்து கொள்வது பெரிய சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment