Thursday, January 8, 2015

இனிமேல் நீச்சல் உடைக்கு தடை!

உலக அழகி போட்டியில் இனிமேல் நீச்சல் உடை பிரிவு சார்ந்த போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1951ம் ஆண்டு முதல் உலக அழகி போட்டியில் நீச்சல் உடையில் தோன்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அப்போது முதல் உலக அழகியாக மகுடம் சூடப்பட்ட கிகி ஹகன்சன், நீச்சல் உடை அணிந்த நிலையில் பரிசினை வென்றார்.
இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு இந்த சுற்று போட்டியை மேடையில் நடத்த வேண்டாம் என போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்தனர்.
இருப்பினும் தனியாக ஒரு இடத்தில் வைத்து பீச் பேஷன் என பெயர் மாற்றப்பட்டு ஒவ்வொரு வருடமும் இந்த சுற்று போட்டி நடத்தப்பட்டது.
எனினும் 2013ம் ஆண்டில் உலக அழகி போட்டி இந்தோனேஷியாவில் நடந்தபோது அது அங்குள்ள முஸ்லிம்களை பாதிக்க கூடாது என்பதற்காக நீச்சல் உடை சுற்று ரத்து செய்யப்பட்டது.
கடந்த வாரம் லண்டனில் பெண்களுக்கு ஆதரவானவர்கள் ஒன்று கூடி, நீச்சல் உடை சுற்று செக்சியானது என்றும் பெண்களை அது அவமதிக்கிறது எனவும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இனிமேல் நீச்சல் உடை சுற்று இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக அழகி போட்டியின் பெண் தலைவரான ஜூலியா மோர்லி கூறுகையில், பெண்கள் நீச்சல் உடை அணிந்து இங்கும் அங்கும் அலைவதை பார்க்க நான் விரும்பவில்லை, அது அவர்களுக்கு எதனையும் செய்வதில்லை என்றும் நமக்கும் எதனையும் செய்ய போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment