Saturday, January 10, 2015

என் அப்பா என்னை கற்பழித்தார்: ஏன் என்றால் விலை மாதிடம் செல்ல அவரிடம் பணம் இல்லை !


பருவ வயதில் இருந்த சில்வியா என்னும் பெண்ணை அவரது தந்தையே பல தடவைகள் கற்பழித்துள்ளார். ஆனால் தந்தையின் வக்கீல் நீதிமன்றில் தெரிவித்த காரணத்தை கேட்டால் ரத்தமே கொதிப்படையும். அது என்னவென்றால், விலை மாதிடம் சென்று செக்ஸ்சில் ஈடு பட தன்னிடம் அப்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார் என்றால் பாருங்களேன். பிரித்தானியா சண்டர்-லான் என்னும் இடத்தில் வசித்து வந்த சில்வியாவை(17) அவரது தந்தையான ஒலிவர் என்னும் நபர் தலை முடியில் பிடித்து இழுத்து கொடுமைப் படுத்துவது வழக்கம். நாளடைவில் அதுவே பாலியல் தொல்லையாக மாற ஆரம்பித்துவிட்டது. பின்னர் படிப்படியாக அவர் சில்வியாவை கற்பழிக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது சில்வியா பயத்தால் எவருக்கும் இதனைச் சொல்லவில்லை. பின்னர் அவர் திருமணம் முடித்து சென்றுவிட்டார்.
தற்போது அவருக்கு 47 வயது. சுமார் 30 ஆண்டுகளாக இந்த விடையத்தை எவரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவர் போராடி வந்துள்ளார். ஒலிவருக்கு தற்போது 67 வயது ஆகிறது. இவர்களது அம்மா உயிரோடு இருந்த காரணத்தால் சில்வியா இது குறித்து வெளியே யாரிடமும் பேசியதே இல்லை. ஆனால் அம்மா 2012ம் ஆண்டு இறந்துபோனார். இதனை அடுத்தே அவர் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார். 30 ஆண்டுகள் கழித்து , ஒரு பெண் வந்து முறையிடுகிறார் என்றால் சந்தேகம் வரும் அல்லவா. தந்தையோடு ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே இவர் இவ்வாறு செய்கிறார் என்றே பொலிசார் முதலில் நினைத்தார்கள். ஆனால் சில்வியா சொன்ன கதைகள் பல ரத்தத்தை உறையவைத்தது. பிரித்தானியப் பொலிசார் என்ன சும்மா விட்டுவிடுவார்களா ?
சில்வியா சொன்ன சில குறிப்புகளை வைத்து பொலிசார் 67 வயதாகும் ஒலிவரை விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு கால கட்டத்தில் அவரால் உண்மைகளை மறைக்க முடியாத நிலை தோன்றிவிட்டது. இதனால் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இவ்வாறு பெற்ற மகளையே ஏன் கற்பழித்தீர்கள் என்று நீதிமன்றில் கேட்டபோது, விலை மாதிடம் செல்ல பணம் அவரிடம் இருக்கவில்லை என்று அவர் சார்பாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். ஆனால் நீதிபதி , தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார். இறுதியாக தான் தற்போது நிம்மதியாக வாழ்வதாகவும். தான் 2 பிள்ளைகளின் தாய் என்று சில்வியா கூறியுள்ளார். பல பெண்கள் சிறிய வதில் நடந்த பல கொடுமைகளை மறைத்து, மனதுக்குள் புதைத்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில்வியா அப்படி அல்ல. துணிச்சலாக சரியான நேரம் பார்த்து தனது தந்தைக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். 

No comments:

Post a Comment