Wednesday, January 28, 2015

லண்டனில் உள்ள ஹலிஃபக்ஸ் பங்கில் வேலைபார்த்து ஆட்டையைப் போட்ட பெண் !

லண்டனில் North Finchley என்னும் இடத்தில் அமைந்துள்ள ஹலிஃபக்ஸ்(Halifax) வங்கியில் வேலைபார்த்த, ஆஷா என்னும் பெண் தனது காதலனுடன் இணைந்து பெரும் திருட்டு தனத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த வங்கிக்கு வரும் நபர்களின் டெபிட் காட் இலக்கங்களை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளார். மேலும் ரகசிய குறியீட்டு நம்பரையும்(PIN) எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருமாக இணைந்து சுமார் 123,000 ஆயிரம் பவுன்டுகளை ஏமாற்றி, பிறர் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளார்கள்.
நகைகள் வாங்க, கார் வாங்க என்று இவர்கள் அந்த பணத்தை செலவு செய்துள்ளமை தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினால் ,இவர்கள் ஒரு புதுக்கதையை சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அது என்னவென்றால் தானும் தனது காதலனும் சேர்ந்து இருந்த சில அந்தரங்க புகைப்படத்தை ஒருவர் வைத்திருப்பதாகவும். அன் நபர் அதனை இன்ரர் நெட்டில் வெளியிடுவேன் என்று தம்மை மிரட்டியதனால் , அவர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக கிரெடிட் காட் இலக்கங்களை தான் திருடி, தனது காதலனிடம் கொடுத்து அவரிடம் கொடுக்கச் சொன்னேன் என்கிறார். இந்த கதையை நீதிமன்றம் நம்புமா ?

No comments:

Post a Comment