Wednesday, January 28, 2015

சந்திரனை விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது

ந்திரனை விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.


கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நியூ மெக்சிகோவில் உள்ள Lincoln Near-Earth Asteroid Research (LINEAR) தொலைநோக்கி புதிய விண்கல் ஒன்றை கண்டுபிடித்தது.

சந்திரனை விட மூன்று மடங்கு பெரிதான விண்கல்லுக்கு, ‘2004 பிஎல் 86′ (2004 BL86) என பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது குறித்த விண்கல் பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

தற்போது பூமியில் இருந்து 745,000 மைல் (12 லட்சம் கிலோ மீட்டர்) தூரத்தில் உள்ள இந்த விண்கல், வெகு விரைவில் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற விண்கல் பூமியை 200 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கடக்கும் என்றும், அதே நேரத்தில் பூமியில் மோதாமல் கடந்து செல்லும் எனவும் நாசா மையத்தின் ஜெட் புரோ புல்சன் ஆய்வகம் (Jet Propulsion Laboratory) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment