Thursday, January 8, 2015

இஸ்லாம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது! ஜேர்மன் மக்கள் கருத்து!

ஜேர்மனியில் இஸ்லாத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் இஸ்லாமியவாதிகள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் பெகிடா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 100 பேர் வரையில் மட்டுமே இருந்த இந்த அமைப்பில், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக போராட்டங்களை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
இந்நிலையில் Bertelsman Foundation மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், 57 சதவிகிதம் பேர் இஸ்லாம் ஜேர்மனுக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இது கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும், 24 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்களுக்கு ஜேர்மனியில் குடியேற அனுமதி வழங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment