Monday, January 5, 2015

வேட்டி, சேலை கட்டி..பக்குவமாய் பச்சரிசி பொங்கல் வைத்த வெள்ளைக்காரர்கள் !

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டினர் தமிழர்களின் பராம்பரிய ஆடையை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர்.
அவுஸ்திரேலியா, நோர்வே, அமெரிக்கா, செக்கோஸ்லோவாக்கியா, அர்ஜென்டினா, ஜேர்மனி, நெதர்லாந்து, உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 48 பேர், கடந்த 28–ந் திகதி சென்னைக்கு வந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றிபார்த்த அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில், பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய உடைகளான, ஆண்கள் வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தனர். பெண்கள் சேலை கட்டி வந்தனர்.
இது குறித்து வெளிநாட்டினர் கூறியதாவது, தமிழ் மக்கள் எங்களிடம் மிகுந்த அன்பு காட்டுகின்றனர். இந்திய மக்கள் மிகவும் நெருங்கி பழகுகின்றனர். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பொங்கல் விழா மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதனை வாழ்நாளில் மறக்க முடியாது என்று உற்சாகத்துடன் கூறியுள்ளனர்.
http://www.newindianews.com/view.php?20360442200mmDf44eaymOll4cbbWgAKdddcKAMQAdbccnlOOee43DDmY3e022A40023

No comments:

Post a Comment