Thursday, January 29, 2015

குழந்தைகளுக்கான உதவி தொகையை உயர்த்தும் ஜேர்மனி

குழந்தைகளுக்காக மாதந்தோரும் வழங்கப்படும் உதவி தொகையை 20 யூரோக்களாக உயர்த்த ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு மாதத்தில் ஒரு குழந்தைக்கு 10 யூரோக்களும், 2016ஆம் ஆண்டிலிருந்து கூடுதலாக 10 யூரோக்கள் என மொத்தமாக 20 யூரோக்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
வறுமையை குறைக்கும் குறிக்கோளுடன் தொடங்கவுள்ள இத்திட்டத்திற்கு, ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்டியன் ஜனநாயக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் அடிப்படையில் முதல் குழந்தையின் பெற்றோர்கள் ஒரு மாதத்திற்கு 184 யூரோக்களும், மூன்றாம் குழந்தையின் பெற்றோர்கள் 190 யூரோக்களும், நான்காவது குழந்தையின் பெற்றோர்கள் 215 யூரோக்களும் பெறுவார்கள்.
இத்திட்டத்தில் குழந்தைகளுக்கு 4,368 முதல் 4,608 யூரோக்கள் வரை வரிச்சலுகைகள் அளிக்கவும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment