Wednesday, January 28, 2015

பனாமாவில் தலையில் சுட்ட கூலிப்படை: ஆனால் அன் நபர் இறக்காத அதிசயம் !


ஜேர்மனியை பிறப்பிடமாகக் கொண்ட நபர் பனாமா நாட்டிற்கு வேலை நிமிர்த்தம் சென்றுள்ளார். குறித்த இன் நபர் உணவு விடுதி ஒன்றுக்கு சாப்பிடச் சென்றுள்ளார். அதுவரை வெளியே மோட்டார் சைக்கிளில் காத்திருந்த நபர் ஒருவர், உடனே உள்ளே சென்று, சாப்பிட்டுக்கொண்டு இருந்த நபரின் பின்னால் நின்று சுட்டுள்ளார். குண்டு அவர் தலையை துளைத்துள்ளது. இவை அனைத்தும் CCTV கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் காயமடைந்த நபர் இறக்கவில்லை என்றும் , அவர் தற்போது முன்னேறி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகிலேயே அதிக கூலிப்படைகளை கொண்ட நாடு பனாமா தான். இங்கே மூலைக்கு மூலை சிறு குழுக்கள் இருக்கிறது. இவர்களிடம் காசைக் கொடுத்தால் போதும் எவரையும் போட்டு தள்ள தயங்கவே மாட்டார்கள். இன் நாடு மிகவும் அழகானது. ஒரு காலத்தில் அங்கே சுற்றுலாப் பயணிகள் லட்சக் கணக்கில் சென்று வந்தார்கள். ஆனால் தற்போது அங்கே எவரும் செல்வது இல்லை. காரணம் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட கொலைகள் அதிகம் நடைபெறும் நாடாக பனாமா மாறிவிட்டது.

No comments:

Post a Comment