இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில், இதுவரை 39 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து அறிவதற்காக, கடலுக்கடியில் விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடலுக்கடியில் ஏர் ஏசியா விமானத்தின் பின் பகுதி விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விமானத்தின் பின் பகுதி கிடைத்திருப்பதை இந்தோனேசிய மீட்பு அமைப்பின்(பசார்னஸ்) தலைவரான பங்பாங் சொயெலிட்ஸ்யோ உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் தேடி வந்த விமானத்தின் முக்கிய பாகத்தை கண்டுபிடித்துவிட்டோம். விமானத்தின் பின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது’ என்றார். பசார்னசின் அறிவிப்பை ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பெர்ணாண்டசும் தனது டுவிட்டர் இணையதளம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் விமானத்தின் கறுப்பு பெட்டியும் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே விபத்திற்கான காரணமும் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
FelitFelit-01Felit-02Felit-03Felit-04Felit-05