Friday, January 30, 2015

காமா கதிரியக்கத்தால் அண்டவெளியில் 90 சதவீதமான வேற்று கிரகவாசிகள் அழிந்துவிட்டார்கள் !

இந்த பரந்த அண்டவெளியில் நாம் மட்டும் தனியாக இருக்கிறோமா ? இல்லை வேறு கிரகங்களில் எங்களை போன்ற வேற்று கிரக ஜீவராசிகள் இருக்கின்றார்களா என்ற கேள்விகள் மனிதர் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அண்ட வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளது. அவை அனைத்தும் ஒவ்வொரு சூரியன் ஆகும். அதனைச் சுற்றி பல கோடி கோள்கள் உள்ளது. இவ்வாறு இருக்கும் பல மில்லியன் கிரகங்களில் ஒருஜீவராசிகள் கூடவா இல்லை என்று ? நாம் சிலவேளை யோசித்து இருப்போம். அப்படி ஒரு ஜீவராசி இருந்தால் அவர்கள் அனுப்பும் செய்மதி, இல்லையென்றால் ஒரு ரேடியோ அலைக்கற்றை எதுவும் புமியின் பக்கம் வந்ததே இல்லையே ? அது எப்படி ? என்றும் நினைத்திருப்போம்.
ஆனால் தற்போது விஞ்ஞானிகள் சொல்லும் விடையம் பெரும் அச்சத்தை தான் தோற்றுவித்துள்ளது எனலாம். எமது சூரியக் குடும்பம் இருக்கும் பால் வெளி என்னும் நட்சத்திரக் கூட்டத்திற்கு அப்பால் , உள்ள இடங்களில் அடிக்கடி சூரிய வெடிப்புகள் ஏற்படுகிறது. ஒரு நட்சத்திரம் எரிந்து அணையும்போது அது வெடிக்கிறது. அப்போது அதில் இருந்து காமா என்னும் கதிரியக்கம்(gamma rays) வெளியாகிறது. நாம் நினைத்துப் பார்க முடியத அளவு பலமாக இந்த கதிரியம் இருக்கிறது. இது ஒரு கிரகத்திற்கு அருகால் சென்றால் கூட, அந்த கிரகத்தில் உள்ள ஜீவராசிகளின் மரபணுக்களை மாற்றியமைத்து விடுகிறது. இதனால் அடுத்த சந்ததிக்கு பிள்ளையே பிறக்காத அளவு செய்து விடும். மேலும் இக்கதிரியக்கம் அதிகமாக இருந்தால் ஜீவராசிகள் உடனே இறந்துவிடுவார்கள்.
எமது பால்வெளி நட்சத்திரக் கூட்டத்திற்கு அப்பால், இதுபோன்ற மிக மிக கடுமையான கதிரியக்கம் காணப்படுகிறது. எனவே அங்கே முன்னார் இருந்த அனைத்து வேற்றுக்கிரக வாசிகளும் இறந்துவிட்டார்கள். இல்லையென்றால் அடியோடு அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறப்படுகிறது. என்ன தான் அவர்கள் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி கண்டிருந்தாலும், இதுபோன்ற அனர்த்தங்களில் இருந்து தப்பிக்கவே முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் , எம்மை தவிர இந்த பரந்த அண்டவெளியில் வேறு எந்த ஜீவராசிகளும் இருக்கமாட்டார்கள் போல உள்ளதே. அப்படி என்றால் நாம் தனிமையாக தான் இருக்கிறோமா ?

No comments:

Post a Comment