Friday, January 23, 2015

5 மாத கர்ப்பிணியை தாக்கிய பொலிஸ்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

அமெரிக்காவில் 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை பொலிசார் தாக்கிய வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் (Newyork)நகரை சேர்ந்த Sandra Amezquita என்ற 5 மாத கர்ப்பிணியை, அப்பகுதி பொலிசார் வலுகட்டாயமாக இழுத்துக்கொண்டு போவது போலவும், பின்பு அவரை கீழே தள்ளி கைது செய்வது போலவும் வீடியோ ஒன்றில் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் Sandra Amezquita-வின் இளைய மகன் தன்னுடைய இடுப்பில் கத்தி ஒன்று வைத்திருந்ததாக கூறி அவரை பொலிசார் கைது செய்ய வந்தனர். இதனை தடுக்க வந்த பெற்றோர்களை பொலிசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது ஒரு பொலிசார் கர்ப்பிணியான அந்த பெண்ணை இழுத்து, நடைபாதையில் தள்ளி உள்ளார். கீழே விழுந்த அந்த பெண்ணின் வயிறு தரையில் மோதியதால் அவர் கதறி அழுதுள்ளார்.
வயிற்றில் உள்ள குழந்தையை கொன்று பின்பு என் மனைவியையும் கொன்று விடுவார்களா என எண்ணி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த அப்பெண்ணின் கணவர் Ronel Lemos பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மனைவி சம்பவம் நடந்ததற்கு 4 மாதங்களுக்கு முன்பு தான் ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார் என்றும், அவரிடம் இப்படி கொடூரமாக நடந்துக்கொண்ட பொலிசாரின் செயல் வேதனை தருவதாக உள்ளது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண் மீதான இந்த அடக்குமுறை தாக்குதல் மிகுந்த வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்ட தம்பதியர்களின் வழக்கறிஞரான நார்மன் சீஜல் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பொலிசாரை Ronel Lemos தாக்கியதாக கூறி அவர் மீது வழக்கு தொடர போவதாக நியூயோர்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment