Wednesday, January 7, 2015

லண்டனில் விலை உயர்ந்த 1,400 கார்களுடன் கடலில் சரிந்த கார்கோ கப்பல்: எப்படி மீட்பது என்று திண்டாட்டம் !

பிரித்தானியாவின் சவுத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஹோ ஒசாகா என்ற சரக்குக் கப்பல் ஐசில் தீவு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் அந்தக் கப்பலில் இருந்த 24 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சரக்குக் கப்பலில் 1200க்கும் மேற்பட்ட ஜாகுவார், லேன்ட் ரோவர் உள்ளிட்ட 1400 விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல், ஏராளமான கட்டுமானப் பொருட்களும் உள்ளன.
கடலில் கவிழ்ந்திருக்கும் கப்பலை நிமிர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், அதற்கு சில நாட்கள் ஆகும் என்றும், கப்பல் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகப்படியான பளு ஏற்றப்பட்டது விபத்துக்குக் காரணமல்ல என்றும், சரக்குகளை சரியாக அடுக்காததே கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment