Monday, December 29, 2014

மைத்திரி இறங்கிவந்தார்: TNA மைத்திரியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது !

சில வாரங்களாக இருந்து வந்த பெரும் குழப்பம் தற்போது நீங்கியுள்ளது. நேற்று(28) பூட்டிய அறைக்குள் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின், உயர்மட்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்படவில்லை. ஆனால் இன்றைய தினம்(29) காலை சந்திரிக்கா மற்றும் மைத்திரியுடன் நடந்த சில பேச்சுவார்த்தைகள் அனுகூலமாக அமைந்துள்ளதாக அறியப்படுகிறது. மைத்திரியை பின்னால் நின்று இயக்கும், மற்றும், சக்தி மிக்க அரசியல்வாதியாக உள்ள சந்திரிக்காஊடாக சில விடையங்களுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதுஎன்று கூறப்படுகிறது. அது என்னவென்றால் வட கிழக்கில் இருந்து ராணுவத்தை குறைப்பது, இல்லையென்றால் அகற்றுவது என்பது போன்ற விடையங்கள்சிலவற்றில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர் கட்சியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என்று நாளை(30) அறிவிக்க உள்ளதாக அதிர்வு இணையத்திற்கு தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவில் அங்கம் வகிக்கும், ஒருவர் ஊடாக இச்செய்தி உத்தியோக பூர்வமற்ற முறையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் வட கிழக்கில் உள்ள தமிழர்கள் மைத்திரிக்கே வாக்களிக்க வேண்டும் என்று TNA கோரவுள்ளதாக அறியப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் நாளை அவர்கள் இதனை உத்தியோக பூர்வமான அறிவிக்கும் வரை எதனையும் உறுதியாக கூறமுடியாது.
ஏன் எனில் இறுதி நேரங்களில் பல்டி அடிப்பதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல சம்பந்தன் ஐயா மகிந்தரை எதிர்க்க அவ்வளவு சுலபத்தில் ஒத்துக்கொண்டு விடுவாரா என்ன ?
http://www.athirvu.com/newsdetail/1743.html

No comments:

Post a Comment