Thursday, December 25, 2014

ஈராக்கில் இருந்து ISIS நோக்கி ராக்கெட் அடிக்கும் 9 வயதுச் சிறுவன் இவன் தான் !

வட கொரிய அதிபரை சி.ஐ.ஏ கொல்லப் பார்கிறது: படு சூடு பிடித்துள்ள SONY நிறுவனத்தின் படம் !

[ Dec 25, 2014 07:23:57 AM | வாசித்தோர் : 6680 ]
SONY நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் "த இன்ரர் வியூ" (The Interview). இப் படம் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் ஆகும். இந்த காமெடிப் படத்தில் TV அறிவிப்பாளராக பணியாற்றும் ஒரு அமெரிக்கருக்கு வட-கொரிய அதிபர், கிம் ஜொங் கை இன்ரர் வியூ செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனை அமெரிக்க சி.ஐ.ஏ உளவுத்துறையினர் பாவிக்க ஆரம்பிப்பதுபோல படமாக்கப்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜொங் உடன் கை குலுக்கும்போது, அமெரிக்க சி.ஐ.ஏ கொடுக்கும் ஒருவித நஞ்சை அவரது கைகளில் பூசிவிட்டால் அவர் இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள் ஏஜண்டுகள். ஒட்டு மொத்தத்தில் பேட்டி எடுக்க என்று வடகொரியா சென்று அதிபரை கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது.
இதில் வட கொரிய அதிபர் கிம் ஜொங்கை மிகவும் கேவலமாக காட்டுகிறார்கள். குறிப்பாக அவர் மிகவும் குண்டாக இருப்பதும், அவர் குளிக்க செல்வதுபோன்ற காட்சிகளும் உள்ளது. இப் படத்தை வெளியிட வட கொரியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் SONY நிறுவனத்தின் கம்பியூட்டர் வலைப் பின்னல் தாக்குதலுக்கும் உள்ளது. இதன் பின்னணியில் கூட வட கொரியாவே இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனை கிருஸ்மஸ் தினமான இன்று(25) வெளியிட அன் நிறுவனம் தயாராக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி பல திரையரங்குகள் இந்த படத்தை வெளியிட மறுத்துவிட்டார்கள்.
இன் நிலையில் அமெரிக்க அதிபர் ஓபாமா ஒரு கருத்தை வெளியிட்டார். SONY நிறுவனம் என்னை அணுகி இருந்தால் நான் அதனை வெளியிட சரியான ஏற்பாட்டை செய்துகொடுத்திருப்பேன் என்று. இக் கருத்தால் படம் மேலும் சர்வதேச அளவில் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த படத்தின் தயாரிப்புக்கு பின்னால் அமெரிக்க வெள்ளைமாளிகையே உள்ளது என வட கொரியா தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் ஓபாமாவின் ஆதாரவோடு இன்றைய தினம் இப்படத்தை SONY நிறுவனம் வெளியிடுகிறது. அமெரிக்காவில் உள்ள சில திரையரங்குகள் மறுத்தாலும் , குறித்த இப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1718.html

பின் லேடனை போட்டுத்தள்ளிய அமெரிக்க சீல் படை சிப்பாட் மீது அமெரிக்க அதிகாரிகள் விசாரணை !

[ Dec 25, 2014 08:09:42 AM | வாசித்தோர் : 8615 ]
'பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றதை அம்பலப்படுத்தியது ஏன்?' என, முன்னாள் சிறப்பு அதிரடிப் படை வீரரிடம், அமெரிக்க தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. பாக்.,ல், அபோபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அல்-குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், கடந்த, 2011ம் ஆண்டு மே 2ம் தேதி, அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், 'பின்லேடனை நெற்றிப் பொட்டில் சுட்டது நான்தான்' என, முன்னாள் சிறப்பு அதிரடிப் படை வீரர் ராப் ஓ நீல், கடந்த மாதம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.ஏற்கனவே, மேட் பிசோநெட் என்ற முன்னாள் அதிரடி படை வீரரும், இதே போல், பின்லேடனை தான்தான் கொன்றதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பின்லேடன் சுடப்பட்ட தகவலை அம்பலப்படுத்தியது ஏன் என, ராப் ஓ நீலிடம் அமெரிக்க தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
சிறப்பு அதிரடிப் படையில் சேரும்போது, வேலையின் தன்மை குறித்து வெளியாரிடம் தெரிவிக்க மாட்டேன் என, அளித்த உறுதிமொழியை, ராப் ஓ நீல் மீறிவிட்டார் என, அதிரடிப் படை தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
http://www.athirvu.com/newsdetail/1719.html

ஈராக்கில் இருந்து ISIS நோக்கி ராக்கெட் அடிக்கும் 9 வயதுச் சிறுவன் இவன் தான் !

[ Dec 25, 2014 11:09:31 AM | வாசித்தோர் : 8760 ]
ஈராக்கின் எல்லை புற நகரங்களில், ISIS பயங்கரவாதிகள் ஊடுருவி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து அமெரிக்க படைகளும் ஈராக் ராணுவமும் போராடி வருகிறது. ஆனால் சில நகரங்களை அந்த நகரத்தில் உள்ள மக்களே பாதுகாத்து வருகிறார்கள். பெண்கள் சிறுவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திப் போராடி வருகிறார்கள். இங்கே நீங்கள் பார்பது ஈராக்கில் உள்ள நகரம் ஒன்றில் 9 வயதுச் சிறுவன் ராக்கெட் குண்டுகளை ஏவுவது தான். இவன் ISIS பயங்கரவாதிகள் இருக்கும் திசை நோக்கி ராக்கெட் குண்டுகளை ஏவி வருகிறான்.
காரில் பொருத்தப்பட்டுள்ள இக் குண்டுகளை இவன் ஏவுவதை, சிலர் படம் எடுத்து இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். ISIS பயங்கரவாதிகள் நகரங்களுக்குள் வந்தால், அவர்கள் அந்த நகரில் உள்ள மக்களை அடிமைகளாக்கி பெண்களை பாலியல் கைதிகள் ஆக்குகிறார்கள். இதனால் தம்மை பாதுகாக்க,  பொதுமக்களே போராடவேண்டி உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1725.html

No comments:

Post a Comment