Monday, December 29, 2014

லண்டன் முழுவதும் வெப்ப நிலை வீழ்ச்சி: பனி பொழிவு வரலாம் என எச்சரிக்கை விடுப்பு !


பிரித்தானியாவின் லண்டன் , ஸ்கொட்லாந்து உட்பட பல நகரங்களில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது. மேலும் வெப்பநிலை வீழ்ச்சி கண்டு கடுமையான குளிர் நிலவுவதனால் இங்கிலாந்தின் கிழக்குப் பிராந்தியம், வடக்குப் பிராந்தியம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் பனிப்பொழிவு ஏற்படக் கூடிய சாத்தியமுள்ளதாக வானியல் அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மத்திய இங்கிலாந்து பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதனால் பெரு வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது சாரதிகள் அதிக கவனம் எடுத்துகொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பெர்த்ஷையர் பிராந்தியத்தில் மிக குறைந்த வெப்பநிலையாக - 5 C பதிவாகியுள்ளது. இதனால் நிலப்பகுதிகளில் பனிப்படிவுகள் பரந்து காணப்படுகின்றன. நேற்று (ஞாயிறு) இரவு இங்கிலாந்தின் தெற்கு பிராந்தியங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில் - 10 C அளவிற்கு குறைந்த வெப்பநிலை காணப்படும் என வானியல் அவதான நிலைய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment