Tuesday, December 23, 2014

டக்ளசுடன் பாரதிராஜா, சர்சையின் உச்சக்கட்டம் !


யாழ்ப்பாணம் சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா, டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததால் சில சர்ச்சை கிளம்பியுள்ளது. முன்னர் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை நடத்தியவர்கள் சிலர், தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகிறார்கள். தமிழீழம் தான் எமது இறுதி தேவை என்று கூறி போராட மறுக்கும் இவர்கள், தாம் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள சிலவேளைகளில் எதேட்சையாக நடக்கும் விடையங்களை பெரிதுபடுத்தி அதனை ஒரு போராட்டமாக மாற்றிவிடுகிறார்கள். அன்று முதல் இன்றுவரை, ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் 2012ம் ஆண்டு லண்டன் வந்தவேளை எந்த ஒரு தயக்கமும் இன்றி தமிழீழ தேசிய கொடியை ஏந்தி லண்டன் வீதிகளில் வலம் வந்தவர்.
அவர் இன்று யாழ் சென்றவேளை, அவர் வரவை அறிந்த டக்ளஸ் தேவானந்தா என்னும் நரி, உடனே தனது பரிவாரங்களை அழைத்துக்கொண்டு யாழ் மாநகர சபைக்கு சென்று அவரை திடீரென பார்க முற்பட்டுள்ளார். அதற்காக பாரதிராஜா என்ன பின் கதவால் ஓடவா முடியும் ? அவரும் சந்தித்துப் பேசினார். டக்ளஸ் தனது நிலைப்பாட்டை கூற பதிலுக்கு பாரதிராஜவும் தன் நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆனால் இதற்கு கை.. கால்... மூக்கு வைத்து சிலர் கதைகளை பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். டக்ளசை பாரதிராஜா சந்தித்தார். அவரும் ஒரு தமிழினத் துரோகி என்று எல்லாம் முக நூலில் எழுதி தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். டக்ளசை நாளாந்தம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கிறது. வட மாகாண முதல்வர் சந்திக்கிறார்.
ஆனால் அவர்களை எல்லாம் இவர்கள் எதுவும் கூறமாட்டார்கள். ஆனால் பாரதிராஜா மட்டும் பார்த்துவிட்டால் போதும். உடனே கட்டுக்கதைகளை எழுத ஆரம்பித்துவிடுவார்கள் இந்த வாய்ச் சொல் வீரர்கள். சிலவேளை டக்ளசை பார்காமல் சென்றிருந்தால், டக்ளசை எதிர்கொள்ள முடியாமல் பாரதிராஜா ஓடினார் என்று எழுதி இருப்பார்கள். சந்துவிட்டதால் இப்போது இப்படி எழுதிகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்களை எல்லாம், இப்படி சிறுபிள்ளை தனமாக எதிர்த்தால் எமக்கு, பலம் எங்கே இருந்து கிடைக்கும் ? சிலர் சுயலாபம் கருதி இவ்வாறு கருத்து வெளியிடுகிறார்கள் என்றால், இதனை பரப்பிவருபவர்களுக்கு எங்கே போனது அறிவு ?

No comments:

Post a Comment