Thursday, December 25, 2014

மலையகத்தில் கடும் மழை: எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாற்றம்! சீரற்ற காலநிலை தொடரும்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 04:03.11 AM GMT ]
இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதன்காரணமாக 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, தென்கிழக்கு தென் மாகாணங்களின் கடற்பிரதேசங்கள் அபாயகரமானதாகவும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றருக்கும் அதிகமாக வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அம்பன் கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் நாவுல பிரதேசத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நிலவும் மழையுடன் கூடிய வானிலையை அடுத்து சில மாவட்டங்களில் பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் பாரிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு பிரவின் பிரதான ஆர் எம் எஸ்.பண்டார தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahsz.html

மலையகத்தில் கடும் மழை: எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 05:36.27 AM GMT ]
மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்தேக்கத்தின் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
அதிக மழை காரணமாக சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீா்தேக்கங்களின் நீா்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கிச்செல்லகூடிய அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகனசாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொள்கின்றனா்.
இதேவேளை காசல்ரீ நீா்தேக்கத்திலும் நீரீன் மட்டம் உயா்ந்துள்ளது. மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக 1 மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
எனினும் அதன் பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்ட பின் போக்குவரத்து வழமைக்கு மாறியது. தொடா்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ குமாரசிறி தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahs3.html

No comments:

Post a Comment