Tuesday, December 23, 2014

செக்ஸ் இணையத்தளங்களால் கலியாணம் கட்டுவது குறைவடைந்துவிட்டது: லண்டன் அதிகாரி கவலை !


செக்ஸ் இணையத்தளங்கள் அதிகரித்துள்ளதால், பிரித்தானியாவில் கல்யாணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்கள் பலர் இதற்கு அடிமையாகி வீட்டிலேயே இன்பத்தை அனுபவிக்கிறார்கள். அத்தோடு ஆண்கள் மிகவும் இலகுவாக ஒரு தற்காலிக துணையை தேடிக்கொள்கிறார்கள். அதுவும் 2 அல்லது 3 நாட்களுக்கே என்றும் கூறப்படுகிறது. காதலித்து திருமணம் முடித்து , ஒன்றாக வாழ்ந்து இன்பத்தை அனுபவிக்கும் நிலை போய் , பாஸ் பூட் ரேஞ்சில் இன்பத்தை அனுபவித்துவிட்டு, காதலியை அப்படியே கைவிட்டுச் செல்லும் ஆண்கள் அதிகரித்துள்ளார்கள்.
இதுபோலவே முன்னர் பெண்கள் தமக்கு ஒரு ஆண் துணையை தேடவேண்டும் என்றால் நடை கிளப் அல்லது கழியாட்ட விடுதிக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது உள்ள நிலையில் பெண்கள் சாட்டிங்கில் பெரும் நேரத்தை செலவுசெய்வதோடு, அதில் அறிமுகமாகும் ஆணுடன் சில காலம் தொடர்பை பேணிவிட்டு பின்னர் வேறு ஆண்களை நாடிச் சென்றுவிடுகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களும் சரி ஆண்களும் சரி திருமண பந்தத்தினுள் செல்ல ஆசைப்படவில்லை. அதனை அவர்கள் ஒரு பொருட்டாகவும் எண்ணவில்லை என்று கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் ஆசிய இனத்தவர்கள் மற்றும் சில வேற்றின மக்களே தற்போது திருமணத்தை முடிக்கிறார்கள். இதேவேளை பெரும்பாலான ஆங்கில இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பாய் பிரன் , மற்றும் கேள் பிரன்களோடு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அதுவும் தற்காலிக வாழ்கையே.

No comments:

Post a Comment