Sunday, December 28, 2014

க.பொ.த.உயர்தரப்பரீட்சை பெறுபேறு!- மட்டு.மாணவர்கள் சாதனை - யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் முதல் இடத்தில் சித்தி!

வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞானப் பிரிவில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஏகாம்பரம் யுகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்துள்ளார். 
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தினையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவின் சாதனை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திற்கும் கிராமத்துக்கும் வலயத்துக்கும் பெருமையை சேர்த்துள்ளதாக கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய அதிபர் இரா.செல்வராசா தெரிவித்தார்.
மேலதிக வகுப்புகளுக்கு தனியாரிடம் அனுப்பாமல் பாடசாலைக்குள் மேலதிக ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டு மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் அந்த முயற்சிக்கு கிடைத்த பாரிய வெற்றியே யுகேசனின் சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலையின் வரலாற்றில் முதல்முறையாக மாவட்ட மட்டம் தேசிய மட்டத்தில் இந்த பரீட்சை பெறுபேற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
இணையத்தளத்தில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த மாணவன் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று மாவட்டத்துக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் வர்த்தகப் பிரிவில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவி சிவலிங்கம் நேரூஜா வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்துள்ளார்.
வெளியாகிய பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.
இணையத்தளத்தில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த மாணவி மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2014 உயர்தரப் பரீட்சையில் முதல் இடம்பெற்ற பெற்றவர்களின் முழு விபரம்
2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முதல் இடத்தில் சித்தியெய்தியவர்களின் முழுமை விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பாக்கியராஜ் டாருகீசன், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹிருனி உதார ஆகியோர் முதல் இடத்தில் சித்தியெய்தியுள்ளனர்.
கலைப் பிரிவில் கொழும்பு விசாகாவின் ஷாவினி நெத்சலா பத்திரன, பொது பாடவிதானத்தில் மியூஸியஸ் வித்தியாலயத்தின் நிபுணி டயஸ் நாகவத்த, வர்த்தகப் பிரிவில் காலி தெற்கு மகளிர் வித்தியாலயத்தின் யு ஜி. பியூமி தனஞ்செ ஆகியோர் தேசிய ரீதியில் முதல் இடம்பெற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKafo3.html

No comments:

Post a Comment