Thursday, December 18, 2014

குஷ்பு வீடு முற்றுகை: கைகோர்த்து களமிறங்கிய காங்கிரஸ்!

பன்னீர் செல்வத்தின் மடியில் ஜெயலலிதா: இது தமிழக கொடுமை என்கிறார் குஷ்பு
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 07:37.11 AM GMT +05:30 ]
டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு பேசியுள்ளார்.
விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய போதுதான் இந்த தகவலை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன்.
நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன்.
சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான்.
பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இருக்கிறது. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார்.
ஆனால், இப்போது நிலைமை என்ன? முதலில் முதல்வர் ஆகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.
பாஜக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார்.
இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் ரம்மி விளையாடாததுதான் பாக்கி. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து சென்றவர் கூட்டத்தில், அவரது கட்சித் தலைவர் புகைப்படத்தை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு அமர்ந்துள்ளார், இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.


குஷ்பு வீடு முற்றுகை: கைகோர்த்து களமிறங்கிய காங்கிரஸ்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 08:27.20 AM GMT +05:30 ]
பட்டினப்பாக்கத்தில் குஷ்பு வீட்டை முற்றுகையிட முயற்சி செய்ததால் போராட்டத்தை தடுக்க காங்கிரசார் திரண்டனர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூறியுள்ளார்.
இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள அவரது வீட்டை இன்று முற்றுகையிட போவதாக தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அறிவித்தார்.
இதையடுத்து பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலை லீத்கேசில் வடக்கு தெருவில் உள்ள குஷ்பு வீட்டு முன்பு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, மாநில செயலாளர் ரமணி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மயிலை அசோக், பொதுக்குழு உறுப்பினர் ரவிராஜ், எம்.ஆர்.ஏழுமலை, அசோகன், மணிபால், சூளை ராஜேந்திரன், தணிகாசலம், தமிழ்வாணன், ஏழுமலை, அகரம் கோபி, பாலமுருகன் உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கொடியுடன் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் ரவிசேகரன் மற்றும் பொலிசார் அங்கு சென்று, திரண்டு நின்ற காங்கிரஸ் கட்சியினரை கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனால் பொலிசாரும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் குஷ்பு வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி மொத்தமாக நின்றனர்.
இதற்கிடையே மதியம் 12.30 மணி அளவில் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் தமிழர் முன்னேற்றப்படையை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது, போராட்டம் நடந்த போது வீட்டில் குஷ்பு இல்லை.
http://www.newindianews.com/view.php?2eAAlvcb2UI0Ce424OMoc22a4mN23d4RDKc00a66AYde3AC4c0c233OYd3

No comments:

Post a Comment