Thursday, December 25, 2014

வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சு உலர் உணவு விநியோகம்



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் மற்றும் அ.இ.இந்து மாமன்றம் அவசர உதவி
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 05:06.22 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் முற்றாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அவசரத் தேவையை முன்னிட்டு லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் இரண்டாயிரம் பவுண்ட் நிதி உதவியை மட்டு.மாவட்ட இந்து இளைளுர் பேரவைக்கு வழங்கியது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைளஞர் பேரவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக உதவுமாறு மேலை நாடுகளில் உள்ள இந்து ஆலயங்கள், பொது அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதன் அடிப்படையில் அவசர வேண்டுகோளை ஏற்று உடனடித் தேவையை நிறைவேற்றும் வகையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து முதன் முதல் உதவிய ஒரு அமைப்பும் ஆலயமும் என்றால் அது லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயமாகும்.
எமது மக்களின் நலன்கருதி பலவகைளான சேவைகளை வழங்கி கொண்டிருக்கும் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபையினரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிழக்கு இந்து தமிழ் மக்களுக்கும் மனமார பாராட்டுகின்றனர்.
இதனை முன்னின்று செயற்பட்ட கிராம சந்திரன் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்hடையில் 24.12.2014 அன்று பாதிக்கப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களின் அவசிய தேவைகளாகிய பாய், வெற்சீட், சிறுவர்களுக்கான நுளம்பு வலை என்பன உடனடியாக அது லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் மூலம் வழங்கப்பட்டது.
வந்தாறுமுலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ள குடும்பங்களுக்கு, களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 25 குடும்பங்களுக்கும் பலாச்சோலை விவேகானந்தா வித்தியாலயத்தின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 34 குடும்பங்களுக்கும், வெற்சீட் உதவியும் சிறுவர்களுக்கான நுளம்பு வலை உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், களுவன்கேணி நெடியமடு பாடசாலை முகாம்களில் வாழும் 100 குடும்பங்களுக்கும் களுவன்கேணி சனள கட்டிட முகாம்களில் வாழும் 12 குடும்பங்களுக்கும் களுவன்கேணி சிங்கள தோப்பு பாடசாலை முகாம்களில் வாழும் 28 குடும்பங்களுக்கும் பாய் உதவியும் வழங்கப்பட்டது.
மேலும் ஏனைய முகாம்களில் வாழும் மக்களுக்கும் பாய், வெற்சீட், சிறுவர்களுக்கான நுளம்பு வலை சிறுவர்களுக்கான கோட்டஸ் என்பன உடனடியாக வழங்க ஒழங்குகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ் உதவியை வழங்கும் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் இதற்கான (2000 ஸ்ரேலின் பவுண்ட்) நிதி உதவியை நான்கு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபா  மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைளுர் பேரவைக்கு வழங்கியுள்ளது.
மக்கள் பாதிக்கப்பட்டதும் புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புக்களிடமும்  புலம்பெயர் உறவுகளிடமும் பேரவை வேண்டுகோள் விடுத்த வேளை முதன் முதலாக இம் மக்களுக்கு உதவ வந்ந ஒரு புலம் பெயர் நாட்டு இந்து ஆலயம் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம்.
இவ் ஆலயம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் வேண்டுதலில் இவ்வருடம் பல்கலைக்கழகம் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த நிதி உதவி என்ற வகையில் மாணவர்களுக்கான ஒரு வருட நிதியை வழங்கியதுடன், சுயதொழில் உதவி கோரிய மக்களுக்கும் சுயதொழில் உதவி வழங்கியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் உதவி
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போது கடும் மழையால் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட செங்கலடி, சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த 478 குடும்பத்தை சேர்ந்த 1553 தொகை மக்களுக்கும் சித்தாண்டி நடராஜானந்தா கல்லூரி கட்டத்தில் தங்கியிருந்த 30 குடும்பத்தை சேர்ந்த 121 பேருக்கும்
சித்தாண்டி முருகன் கோயில் அன்னதான மண்டபத்திலும் கலாச்சார மண்டபத்திலும் சுமுஆ வித்தியாலயத்தில் தங்கியிருந்த 76 குடும்பத்தை சேர்ந்த 242 பேருக்கும் மாவடி வேம்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் தங்கியிருந்த 64 குடும்பத்தை சேர்ந்த 235 பேருக்கும்,
சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தங்கியிருந்த 225 குடும்பத்தை சேர்ந்த 652 பேருக்கும் அவசிய தேவையாக சிக்னல், பிரஷ், சவர்க்காரம், சிறுவர்களுக்கான நுளம்பு வலை உட்பட்ட பொருட்கள் வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களால் இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர்களும் அதன் உத்தியோகஸ்தர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
இதற்காக அகில இலங்கை இந்துமாமன்றம் இரண்டு லட்சம் (200000) ரூபா நிதி வழங்கியிருந்தது.
இப்பாதிப்பை எதிர் கொண்ட மக்களுக்கு உடனடி அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவிய அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கும் இப்பாதிப்பை எதிர் கொண்ட மக்கள் தங்கள் நன்றிகயை தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahw0.html

வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சு உலர் உணவு விநியோகம்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 03:25.42 PM GMT ]
தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக வடமாகாணத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இப்போது பெய்து வரும் மழைகாரணமாக குளங்கள் நிரம்பியுள்ளதோடு, தாழ்நிலங்களில் குடியிருந்தவர்களிற் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்கள் என்பதோடு தொடர் மழை காரணமாக வேலைவாய்ப்பின்றியும் உள்ளனர்.
இதைக்கருத்திற் கொண்டு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை அவசர நடவடிக்கையாக வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உலர் உணவுகள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உலர் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை மகாவித்தியாலயம், புளியம் பொக்கணை நாகேந்திரா வித்தியாலயம், கரவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம், தர்மபுரம் பொதுமண்டபம், முரசுமோட்டை அ.த.க. பாடசாலை, பரந்தன் ராகுலன் முன்பள்ளி, பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆனைவிழுந்தான் அ.த.க. பாடசாலை ஆகிய இடங்களில் தங்கியுள்ள ஆயிரத்துக்கும்  அதிகமான குடும்பங்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண உறுப்பினர் சு. பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா. வை. குகராஜா ஆகியோர் நேரடியாகச் சென்று பொதிகளை விநியோகித்துள்ளனர்.
இது தொடர்பாக வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிடுகையில்,
வடக்கு முதல்வரின் பணிப்பின் பேரில் எமது அமைச்சுக்கு உட்பட்ட உணவு வழங்கல் துறையால் அவசர வேலைத்திட்டமாக வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கான உலர் உணவு விநியோகம் இடம்பெற்று வருகிறது.
முதல்வரின் செயலகத்தால் ஏற்கனவே யாழ். மாவட்டத்துக்கான உலர் உணவு விநியோகம் கணிசமான அளவு இடம் பெற்றுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரிடமும் அவர்களது மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பால் இடம்பெயர்ந்துள்ளவர்களின் விபரங்களைச் சேகரித்துத் தருமாறு அவைத்தலைவர் ஊடாகக் கோரியுள்ளோம்.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் பாதிப்பு விபரங்களை உடனடியாக எங்களது அமைச்சுக்கு அறிவித்ததன் அடிப்படையில் உலர் உணவு விநியோகம் இடம்பெற்றுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahv4.html

No comments:

Post a Comment