Wednesday, December 17, 2014

பொது இடத்தில் முத்தம்: வேதனையுடன் சத்தம் போட்ட நீதிபதி !

பொது இடத்தில் ஒன்று கூடி முத்தம் கொடுத்து போராட்டம் நடத்துவது ஒழுங்கீனமான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கி நாட்டின் பல பகுதிகளிலும் இந்த Kiss of love போராட்டம் பரவி விட்டது.
கேரள மாநிலத்தில் நடந்த முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலும் நடந்தது.
கோழிக்கோடு டவுன் கபே ஹொட்டலில் நடந்த தாக்குதலில் கைதான யுவமோர்ச்சா என்ற அமைப்பைச் சேர்ந்த 5 பேர் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கமால் பாட்சா, முத்த போராட்டம் ஒழுக்கக்கேடானது, ஒழுங்கீனமானது. இந்தப் போராட்டங்களின்போது வன்முறைதான் மூளுகிறது.
இதை வைத்து ரவுடிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவே வழி வகுக்கிறது. கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் நடந்து கொண்ட விதத்தால் மாநிலம் முழுவதும் முத்தப் போராட்டம் என்ற பெயரில் சட்டவிரோதமான, ஒழுங்கீனமான செயல்கள் பரவியது வேதனை தருகிறது என்று நீதிபதி கமால் பாட்ஷா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment