Monday, December 22, 2014

ஸ்னோடனிடம் இருந்து இரகசியங்களைப் பெற ரஷ்யா பயன்படுத்திய செக்ஸ் பாம் !

எந்த செக்கன் வேண்டும் என்றாலும் உயிர் போகலாம்: வித்தியாசமான தொழில் புரியும் நபர்கள் !

[ Dec 22, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 14355 ]
உலகத்தில் பலர் பல தொழில்களை புரிவது உண்டு. வேலை என்று வந்துவிட்டால் ஆபத்தான வேலைகளும் உள்ளது. ஆனால் நீங்கள் இங்கே பார்ப்பது மிகவும் ஆபத்தான வேலையாகும். அதாவது இரக்கமே அற்ற பிராணியான முதலைகளோடு வேலைசெய்வது தான். பாங்கொக் நகரில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில், பலர் வந்து 10 பவுன்களை கொடுத்து டிக்கெட்டை வாங்கிக்கொண்டு சென்று அமர்ந்துவிடுகிறார்கள். ஆனால் அங்கே வேலைசெய்யும் நபர்களின் பாடு தான் நிமிடத்திற்கு நிமிடம் உயிர் ஊசலாடும் நிலை. அவர்களின் வேலை முதலையில் வாயி தனது தலையை வைப்பது.
முதலையின் வாயில் கையை வைப்பது. மேலும் அதன் வாயில் கையை விட்டு உணவை திருப்பி எடுப்பது. வேலைசெய்யும் ஆட்களின் கைகள் முதலையின் தொண்டைவரை செல்கிறது. சிலர் கூறுகிறார்கள் அது பயிற்றுவிக்கப்பட்ட முதலை என்று. ஆனால் அது எந்த செக்கன் வேண்டும் என்றாலும் தனது வாயை மூடலாம். அப்படி மூடினால் அவர் பாடு திண்டாட்டம் தான். இதோ புகைப்படங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1698.html

ஸ்னோடனிடம் இருந்து இரகசியங்களைப் பெற ரஷ்யா பயன்படுத்திய செக்ஸ் பாம் !

[ Dec 22, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 22800 ]
அமெரிக்க உளவுத்துறை குறித்த பல்வேறு இரகசியங்களை வெளியிட்டவர் எட்வர்ட் ஸ்னோடன். இதனால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகி, அங்கிருந்து வெளியேறி தற்போது ரஷியாவில் தற்காலிக தஞ்சமடைந்து உள்ளார்.
அவரிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக ரஷிய உளவுத்துறை அதிகாரிகள் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது தற்போது வெளிவந்துள்ளது.
அதன்படி ரஷியாவின் ‘செக்ஸ் பாம்’ உளவாளி என வர்ணிக்கப்படும் அன்னா சாப்மன் என்ற மாடலிங் பெண் ஒருவரை ஸ்னோடனுடன் நெருக்கமாக பழக விட்டு, அவரிடம் இருந்து உண்மைகளை வெளிக்கொணர திட்டமிட்டுள்ளனர். இதை உறுதி செய்யும் விதமாக, ‘ஸ்னோடனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்ற தகவலை ரஷிய உளவுத்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி அன்னா டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
இந்த திருமணத்திற்கு ஸ்னோடன் சம்மதித்துவிட்டால் அவர் ரஷிய அரசின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படும். ஆனால் அந்த அழகியை மணக்க ஸ்னோடன் மறுத்துவிட்டார்.
http://www.athirvu.com/newsdetail/1699.html

No comments:

Post a Comment