Thursday, December 18, 2014

லண்டன் விசாவை நீடிக்க திருட்டு கலியாணம்: ரெஜிஸ்டர் ஆபிசில் கையும் களவுமாக மாட்டி நபர் !

2011ம் ஆண்டு ஸ்டுடன் விசாவில் லண்டன் வந்த பாபர் கான் என்னும் 24 வயது மாணவன் தொடர்ந்தும் லண்டனில் தங்கி இருக்க ஆசை கொண்டு ஆடிய நாடகம் விபரீதத்தில் முடிந்துள்ளது. குறித்த மாணவர் ஒழுங்காக காலேஜ் செல்லவில்லை என்ற காரணத்தால் லண்டனை விட்டு செல்லுமாறு இமிகிரேஷன் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆனால் பாபர் கான், ஒரு பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நாடகமாடியுள்ளார். குறித்த பெண்ணுக்கு 4600 பவுன்களை கொடுத்து தன்னை போலியாக திருமணம் செய்யுமாறும், விசா கிடைத்த பின்னர் விகாகரத்து செய்யலாம் என்றும் கூறியுள்ளார். குறித்த பெண்ணும் காசுக்கு ஆசைப்பட்டு ஒத்துக்கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் சவுத்ஹாம்டனில் மாநகரில் உள்ள ஒரு ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்று பதிவுத்திருமணம் செய்ய முற்பட்டுள்ளார்கள். இத்திருமணத்திற்கு 2 விருந்தினர் மட்டுமே சென்றும் உள்ளார்கள். இதனை ஏற்கனவே பார்த்து சந்தேகம் கொண்ட ரெஜிஸ்டர் ஆபீசர் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியவேளை பார்த்து பிறிதொரு விடையமும் நடந்துள்ளது. திருமண பதிவுப் புத்தகத்தில் தனது மனைவியின் பெயரை பச்சைப் பிழையாக எழுதியுள்ளார், பாபர் கான். உங்கள் இருவருக்கும் எத்தனை நாள் பழக்கம் என்று ஆபீசர் கேட்க்க பல மாதங்களாக தெரியும் என்று அவர் பதில் கூறியுள்ளார். மேலும் சந்தேகம் கொண்ட ஆபீசர் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வந்த பொலிசார் அவர்களை உடனே கைதுசெய்து, வீட்டை சோதனையிட்டவேளை ஆபீசர் கேட்டால் என்ன சொல்லவேண்டும் என்று 2 பேருமே தமது வீட்டில் பேப்பர் ஒன்றில் ஏற்கனவே எழுதி மனப் பாடம் செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மணமகனுக்கு 20 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மணமகளுக்கு என்ன தண்டனை என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1686.html

No comments:

Post a Comment