Monday, December 29, 2014

காணாமல்போன விமானம் கடலுக்கடியில் - 9 மாதங்களில் 3 விமானங்களை இழந்த மலேசியா! நிஜத்தின் தேடல்!

மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்ததை இந்தோனேஷிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ விமான நிறுவனத்தின் ‘ஏ320–200’ ஏர் பஸ் விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி நேற்று காலை புறப்பட்டு சென்றுள்ளது.
இந்த விமானத்தில் 162 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 156 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் விமானம் புறப்பட்ட சுமார் 42 நிமிடங்களில், சிங்கப்பூர்–ஜகார்த்தா விமான தகவல் பிராந்தியத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து திடீரென மாயமாகியுள்ளது.
இதனையடுத்து சிங்கப்பூர், மலேசியா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே விமானம் கடலில் விழுந்ததை இந்தோனேஷிய அரசு உறுதிப்படுத்தியதையடுத்து, இதில் பயணித்த 162 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவித்துள்ளது.
9 மாதங்களில் 3 விமானங்களை இழந்த மலேசியா! 699 பேர் பலி!- நிஜத்தின் தேடல்
சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த எயார் ஏசியா என்ற மலேசிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் காணமற் போனது தொடர்பான ஆய்வொன்றை லங்காசிறி எப்.எம்.கனடாவிலுள்ள ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மாவுடன் நடத்தியது.
அதன் போது, மலேசியன் எயர்லைன்ஸின் இரண்டு போயிங் 777 விமான இழப்புக்களைப் போல இந்த விமான விபத்தும் மலேசியாவுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
இது ஒரு அசாதாரண நிகழ்ச்சி. இந்த வருடமே 21ம் நூற்றாண்டில் விமான விபத்துக்களில் அதிகம் பேர் கொல்லப்பட்ட ஆண்டு.
சீரற்ற காலநிலை அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது. இடிமின்னலுடன் கூடிய மழைக்கான கால நிலை அது. தனது சாதாரணப் பறப்பு உயரான 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து மேலும் 6000 அடி தூரம் மேலே உயர்ந்து பறக்க விமானி அனுமதியைக் கோரியிருக்கிறார்.
இந்தோனேசியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பறப்புத் தூரம் 5,700 கிலோ மீற்றர்கள் இந்தத் தூரத்தையடைவதற்குத் தேவையானதை விட மேலதிகமாக மூன்று மணித்தியாலங்கள் பறப்பதற்கான எரிபொருளையும் அது கொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் இருந்து ஆபத்தை உணர்த்தும் மே டே என்கிற அபாய அழைப்போ அல்லது பான் பான் என்ற அழைப்போ பயணப் பாதையை மாற்றி உடனே வேறோர் விமான நிலையத்தில் தரையிறக்கும் அழைப்போ கிடைக்கப் பெறவில்லை என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
கடலில் விழுந்த விமானத்தின் பாகங்கள்
ஏர் ஏசியா விமானத்தை தேடுல் பணி நடைபெறும் இடத்தில், சில விமான பாகங்களை அவுஸ்திரேலியா விமானம் கண்டுபிடித்தது என்று இந்தோனேஷியா அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ விமான நிறுவனத்தின் ‘ஏ320–200’ ஏர் பஸ் விமானம், 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபவா என்னும் இடத்திலிருந்து புறப்பட்டு கடலில் விழுந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய அவுஸ்திரேலியாவின் ஒரியான் விமானம் சில விமான பாகங்களை கண்பிடித்துள்ளதாக இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment