Tuesday, December 23, 2014

மலையெங்கும் சிதறிய 300 பேரின் உடல்கள் ... பலத்த அடிவாங்கி சிஞார் மலைப் பகுதியை இழந்த ISIS !

சிரியாவிலும், ஈராக்கிலும் ராணுவ ரீதியாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ISIS இயக்கம், தற்போது அடி வாங்க தொடங்கியுள்ளது. சிரியா ஈராக் எல்லையருகே உள்ள சின்ஜார் மலைப் பகுதியில் கடந்த இரு தினங்களில் நடைபெற்ற யுத்தத்தில் சுமார் 300 பேரை இழந்துள்ளது அந்த இயக்கம். அத்துடன் அந்த மலைப் பகுதியின் பெரும்பாவான பகுதிகளை கைவிட்டு பின்வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சின்ஜார் மலையின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளதாக ஈராக்கின் குர்திஷ் பெஷ்மெகா ராணுவம் அறிவித்துள்ளது.
“கடந்த 24 மணி நேரத்தில், 3,000 சதுர கி.மீ. பகுதியை ISIS இயக்கத்திடம் இருந்து நாம் மீட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார், மெசுத் பர்சானி. இவர் ஈராக்கி குர்திஷ்தான் அமைப்பின் தலைவர். ஈராக்கில் ISIS இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிட வேண்டும் என முதலில் கோரிக்கை விடுத்த அமைப்பு, இந்த ஈராக்கி குர்திஷ்தான் அமைப்புதான். ஈராக்கின் சின்ஜார் மலைப் பகுதியை பல மாதங்களாக ISIS இயக்கம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சிரியா – ஈராக்கி எல்லை அருகேயுள்ள உயர்ந்த பகுதி என்பதால், இந்த மலையில் இருந்து அந்த எல்லைப் பகுதியை கண்காணிப்பது, மற்றும் தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அத்துடன், ஈராக்கில் தாக்குதல் நடந்தால் சிரியாவுக்கு உள்ளே செல்லவும், அங்கே தாக்குதல் நடந்தால் இங்கே வரவும் இந்த மலைப் பகுதி வசதியாக இருந்தது.
அப்படியான முக்கிய நிலப்பகுதியையே இழந்துள்ளது ISIS இயக்கம்.
இந்த மலைப் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் குர்திஷ் ராணுவம் கடந்த வாரம் இறங்கியது. மலைப் பாதையில் சுமார் 10,000 ராணுவத்தினர் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் முன்னேறிச் செல்ல வேண்டிய பகுதிகளில், வானில் இருந்து குண்டுவீச்சு நடத்தின அமெரிக்க விமானப்படை விமானங்கள். “சின்ஜார் மலையின் பெரும்பகுதியை மீட்ட நடவடிக்கை, ஈராக்கிய குர்திஷ் ராணுவம் மற்றும் அமெரிக்க விமானப்படையின் கூட்டு நடவடிக்கை” என அறிவித்துள்ளது, குர்திஷ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில். “அமெரிக்க விமானப்படை விமானங்கள் மலைப் பாதையில் இருந்த ISIS இயக்க காவலரண்களை தகர்த்து விட்ட காரணத்தாலேயே, எமது ராணுவத்தால் மலையில் ஏற முடிந்தது. இந்த தாக்குதலில் சுமார் 300 ISIS இயக்கத்தவர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உடல்கள் மலையின் வெவ்வேறு பகுதிகளில் வீழ்ந்து கிடந்ததை எமது ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர்” என்கிறது, குர்திஷ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அறிக்கை.
அங்கிருந்து வரும் தகவல்களின்படி, இந்த மலையின் மிகச் சிறிய பகுதியே இப்போதும் ISIS இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்தும் யுத்தம் நடக்கிறது. மேலேயிருந்து கீழ்நோக்கி தாக்குதல் நடத்தும் மலை யுத்தம் என்பதால், ISIS இயக்கத்தால் தாம் வைத்திருக்கும் பகுதிகளை தக்க வைப்பது சுலபமல்ல. காரணம், மலையின் உச்சிப் பகுதியை குர்திஷ் ராணுவம் கைப்பற்றி விட்டது (மலையின் உச்சியில் வைத்தே. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், ஈராக்கி குர்திஷ்தான் அமைப்பின் தலைவர் மெசுத் பர்சானி). உச்சியிலிருந்து கீழ்நோக்கி தாக்குவது சுலபம்.
http://www.athirvu.com/newsdetail/1709.html

No comments:

Post a Comment