Thursday, December 18, 2014

“லிங்கா” திரைப்படம் படுதோல்வி, ஏழு நாட்களில், 25 கோடி நஷ்டம்!!!!!!!!!!!!!!!!!!

லிங்கா திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் இணையத்திலும் வெற்றிகரமாக பதிவிறக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  இன்று நாம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் லிங்கா வெளியாகி 7 நாட்களில்  9 லட்சத்திற்கும் அதிகமாக,  நேரடியாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


இதில் cyberlockers, P2P, streaming sites, Torrent Downloads கணக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் 9 லட்சம் டிக்கெட்டிற்கு ரூபாய் 80 வீதம் போட்டால் கூட நஷ்டம் ???. மேலும் இதில் இருந்து குறைந்தபட்சம் 2 லட்சம் திருட்டு DVDகள் தயாரித்து ரூபாய் 30க்கு விற்றால்கூட??
90 வீதமான திருட்டு DVD க்கள் தயாரிப்பவர்கள் வெப்சைட்டில் இருந்தே படங்களை எடுக்கிறார்கள்.
300 க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் (website) லிங்கா நேரடியாக பார்க்க, தரவிறக்கம் செய்யக்கூடியதாக உள்ளது.  இதில் நாம் கணக்கிட்ட 9 லட்சம் வெறும் முதல் 10 வெப்சைட் மட்டுமே.
லிங்கா வெளியாகி சில மணி நேரத்திலேயே இணையத்தில் லிங்கா வெளியாகிவிட்டது.  இதை தடுப்பதற்கோ, அல்லது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கோ தமிழ் திரைதுறை சக்தி அற்று காணப்படுகிறது.
இது லிங்காவுக்கான தனி பிரச்னை கிடையாது.  ஒட்டுமொத்த திரை துறையையே இது அழிக்கிறது என்று தெரியாமல் சங்கங்கள் (ஏதோ 1000 சங்கங்கள் சினிமாவிலை) வாழாமல் இருக்கிறது.
பிரச்னை பெரிதானால் ஒரு ஊர்வலம், ஊர் பெருசுகளை பார்த்து ஒரு மனு என்று முடிகிறது போராட்டங்களும், தீர்வுகளும்.  ஏதோ இதை செய்பவர்கள் எல்லாம் சென்னையில் தான் இருக்கிறார்கள், பிடியுங்கள்  என்பது போல்.
இணைய திருடர்கள் உலகம் முழுவது பரந்திருக்கிறார்கள்.  நாங்களும் இணையத்தில் சென்றுதான் இதை முடிவுக்கு கொண்டுவரணும் என்று கூட தெரியாதவர்கள் பலகோடி பணத்தை இதில் கொட்டுவதில் வரும் பலன்கள் தான் இவை.
இணையத்தில் வருவதை 100% தடுக்க முடியாவிட்டாலும், வருவதை சிலமணி நேரத்தில் அகற்ற (remove) கூடிய வழிகளும், அந்த இணைய கணக்கை முடக்க கூடிய வழிகளும் இணையத்தில் உள்ளது.
இதை விட்டுவிட்டு, குத்துது குடையுது என்று 10 வருடத்துக்கு மேலாக மேடைகளிலும், சங்கத்திலும் புலம்புவது ஒரு விளம்பரம் தேடும் முயட்சியே.  இதையே இன்று சில நடிகர்களும் சங்கங்களும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
திருட்டு வி சி டி இருக்குதெண்டு பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு கடைகளுக்குள் நுழைவதும், சி எம் ஐ பார்த்து மனு கொடுப்பதும் இன்று ஒரு படத்துக்கான விளம்பர உத்தியே அன்றி எதுவும் தமிழ் திரை உலகை காக்கிற ஆக்கபூர்வமான நடவடிக்கை அல்ல.
இந்த செய்தி கூட லிங்கா போல பெரிய மாஸ் படங்கள் வரும்போது தான் பேசப்படுகின்றதே அன்றி புது படங்கள் வந்த வழி தெரியாமலே போய்விடுகிறது.  அத்துடன் தயாரிப்பாளரும் காணமல் போய் நடு தெருவில் வந்துவிடுகிறான்.
பூனைக்கு யார் மணி கட்டுவது?  அல்லது இதில் யார் யாருக்கு என்ன, எவ்வளவு? தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் புரியும்.
இத்தனை பிரச்சனைகள் இருக்கும்போது, எந்த தீர்வும் இல்லாமல் கோடிகளை கொட்டி படமெடுக்கும் தமிழ் திரைத்துறையில் சட்டங்கள் எதற்கு?, இல்லை சங்கங்கள் தான் எதற்கு?


No comments:

Post a Comment