பிளஸ்-அளவு அமெரிக்க பெண் ஒருவர் உலகளாவிய ரீதியாக பட எடிட்டர்களிடம் தனது படத்தை தன் சொந்த நாட்டின் அழகின் தரத்திற்கேற்ப சரிசெய்யுமாறு கேட்டுள்ளார்.
அழகு மற்றும் ஃபேசன் ஆன்லைன் அசிரியரான மாரி சதாட் ஒஸ்பினா என்பவர் தனது பிம்பத்தை 21 வித்தியாசமான புகைப்பட எடிட்டர்களிடம் அனுப்பி அவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றுமாறு கேட்டுள்ளார்.
பல எடிட்டர்கள் தனது படங்களை மெலிதாக்கி உள்ளதையிட்டு தான் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்ததாக கூறினார்.
பெரும்பாலான எடிட்டர்கள் தனது தோற்றத்தை மெலிதாக செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள் என தான் எதிர்பார்த்து கொண்டிருக்கையில் மூன்று எடிட்டர்கள்- உக்ரைன், மெக்சிக்கோ மற்றும் லற்வியா ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று எடிட்டர்கள் தனது தோற்றத்தை குறிப்பிடத்தக்க அளவில்- அவரது அளவை அல்லது எலும்பு தோற்றத்தை மாற்றியுள்ளனர்.
ஏனைய எடிட்டர்கள் வேறு விதமான முறைகளில் மாற்றினர். சிலர் ஆடைகள் மூலம் மாற்றங்களை செய்துள்ளனர். கனடிய எடிட்டர் வெள்ளை நிற turtleneck சுவெட்டர் அணிவித்து ஒரு பொன்னிறம் கொடுத்து குறுகிய சிகை அலங்காரமும் செய்துள்ளார்.
இந்த சோதனையில் பங்குகொள்ள ஐஸ்லாந்தைச் சேர்ந்த எடிட்டர்கள் மறுத்துவிட்டனர்.
வியட்நாம் தொகுத்த புகைப்படம்.
plus1
கனடா தொகுத்த புகைப்படம்.
plus
பாகிஸ்தான் தொகுத்த புகைப்படம்.
plus2
மெக்சிக்கோ தொகுத்த புகைப்படம்.
plus3
லற்வியா தொகுத்த புகைப்படம்.
plus4
உக்ரெயின் தொகுத்த புகைப்படம்.
plus5