Monday, December 29, 2014

தற்கொலை குண்டுதாரியாக மாறினேன்: அப்படி என்றால் தப்பிக்கலாம்... 14 வயதுச் சிறுவனின் கதை !


மான் பிஜி என்னும் கிராமத்தில் வைத்து ISIS பயங்கரவாதிகள் 14 வயதுச் சிறுவன் ஒருவனைப் பிடித்துள்ளார்கள். சிரியாவில் உள்ள பின் தங்கிய கிராமமான மான் பிஜியில் பிடிக்கப்பட்ட இச் சிறுவன் தற்போது ஈராக்கில் பொலிசாரிடம் சரணடைந்து உயிர் தப்பியுள்ளான். திகில் நிறைந்த சோகக்கதையை கேட்டால், ரத்தம் உறையும் !
கட்டாயமாக படையணியில் சேர்கப்பட்ட இச்சிறுவனுக்கு 2 பொறுப்பை கொடுத்து, அதில் ஒன்றை தேர்ந்து எடுக்குமாறு கூறியுள்ளார்கள். ஒன்று படையில் இணைந்து போராடுவது. மற்றையது தற்கொலை குண்டுதாரியாகச் செல்வது. சற்றே புத்திசாலியான இச்சிறுவன், தான் படையணியில் இணைந்து போராடினால் எப்பொழுதும், தன் அருகே ISIS பயங்கரவாதிகள் இருப்பார்கள். இறுதியில் தான் இறந்துவிடுவேன் என்று நன்றாக அறிந்துள்ளான்.
எனவே தான் தற்கொலையாளியாக செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளான். பல மாதங்கள் இவனுக்கு பயிற்ச்சி வழங்கப்பட்டு வந்துள்ளது. இறுதியாக சிரியாவில் இருந்து இச்சிறுவனை ஈராக் நாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளார்கள். ஈராக் நகரில் உள்ள மசூதி ஒன்றை குண்டு வைத்து தகர்க்க ISIS பயங்கரவாதிகள் முடிவுசெய்து, அதற்கு தற்கொலையாளியாக இச்சிறுவனை அனுப்புவது என்று தீர்மானித்துள்ளார்கள். குறித்த இச் சிறுவனின் உடலில் வெடிகுண்டைக் கட்டி, அந்த மசூதிக்கு பக்கமாக அவனை இறக்கிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். தற்கொலை குண்டு மற்றும் அங்கியோடு அவன் அப்படியே சென்று பொலிசாரிடம் சரணடைந்து விட்டான். பொலிசார் உடனே அவன் அங்கியை அகற்றி அவனை கைதுசெய்துள்ளார்கள்.
பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பவே தான் இவ்வாறு ஒரு வழியை தேர்ந்து எடுத்ததாக சிறுவன் கூறியுள்ளான்.
http://www.athirvu.com/newsdetail/1738.html

No comments:

Post a Comment